மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019/20 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் அரசு வங்கிகள் 957.6 பில்லியன் ரூபாய் (13.34 பில்லியன் டாலர்) மோசடி செய்துள்ளதாக நிதியமைச்சர் பாராளுமன்ற அவையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான ஆறுமாத காலத்தில் வாங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 5,743 ஐத் தொட்டது. "வங்கிகளில் மோசடி நிகழ்வுகளைத் தடுக்க அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மேலவையில் தெரிவித்தார்.
இது குறித்து மாநிலங்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில்; கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் 95 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறே மாதங்களில் 5 ஆயிரத்து 743 வங்கி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி மோசடிகளைத் தடுப்பதற்காக விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக செயல்பாட்டில் இல்லாத 3 லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.