அதானி குழுமம் விவகாரத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை தொடர்பான அதானி குழுமம் செய்திகளை வெளியிட தடை கோரி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். 

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 24, 2023, 12:07 PM IST
  • ஹிண்டன்பர்க் அறிக்கையை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.
  • நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம். நாங்கள் எங்கள் உத்தரவை மட்டும் பிறப்பிப்போம்
  • ஹிண்டன்பர்க் அறிக்கை சதியின் விளைவா இல்லையா என்பதை விசாரிக்கும் குழு.
அதானி குழுமம் விவகாரத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் title=

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஊடகங்களுக்கு எங்களால் தடை விதிக்க முடியாது எனவும், எங்கள் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தபோது தலைமை நீதிபதி அமர்வு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "ஊடகங்களுக்கு எதிராக நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை செய்வோம். நாங்கள் எங்கள் உத்தரவை மட்டும் பிறப்பிப்போம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது, 
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு எதிராக விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தால் குழு அமைக்கப்படும் வரை ஊடக அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று எம்.எல்.சர்மா தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் ஹிண்டன்பர்க் அறிக்கை என்பது சதியின் விளைவா இல்லையா என்பதை விசாரிக்கும் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் சர்மா கூறியிருந்தார் 

மேலும் படிக்க: அதானி குறித்து பேசாத பிரதமர்; அவரை காப்பாற்றுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது -ராகுல் காந்தி

இதற்குப் பிறகும் அதானி குழுமம் குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதுபோன்ற அறிக்கைகளால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றார். அதனால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது:
இந்த வாதங்களை நிராகரித்த தலைமை நீதிபதி, 'எங்கள் உத்தரவை ஏற்கனவே ரிசர்வ் செய்துள்ளோம், அதை அறிவிப்போம். சரியான காரணத்தைக் கூறுங்கள். ஊடகங்களுக்கு தடை விதிக்கப் போவதில்லை. இந்த விவகாரத்தில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது பிப்ரவரி 17-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் தீர்ப்பு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Adani Group செய்த முதலீடுகள் பற்றிய விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு RBI உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News