TN Latest News Updates: நடனத்தை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்திருக்கும் நிலையில், அதற்கான சாம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 28ஆம் தேதி சீனாவில் நடைபெறுகிறது. இதில் இரண்டு தமிழர்கள் தேர்வாகி உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு; 1.77 கோடி சேலைகள், 1.77 கோடி வேஷ்டிகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சராசரியாக நாளொன்றுக்கு 4 கொலைகள் நடக்கவில்லை என்றால் முதல்வர் மற்றும் சட்ட துறை அமைச்சருக்கும் தூக்கம் கெட்டுவிடும் என விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Reservation: வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவது போல், பறையர் - ஆதிதிராவிடர் உள் ஒதுக்கீடு கேட்டால் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றுமா என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
Ration Shop News: கடந்த ஜூலை மாதம் ரேஷன் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்காவிட்டால், ஜுலை மாத உணவுப் பொருள்களை இந்த ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பொள்ளாச்சி அருகே ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகளால், கரடுமுரடான பாதையை உயிர் பயத்துடனே கடந்து செல்வதாகவும் , கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்து மத வழிபாட்டு உரிமைகளில் தலையிடுவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
TN Cabinet Latest News Updates: முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியின் முக்கியப் பயிற்சி முகாமில் பங்கேற்க அமெரிக்கா செல்வதற்கு நிதியுதவி வழங்குமாறு இந்தியாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டாம்; பிற மாநில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் உடனடியாக ரத்து செய்ய போக்குவரத்துத்துறை அறிவுறுத்தி உள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள பனைத்தொழிலை ஊக்குவித்து, பனை சார்ந்த கைவினைப் பொருட்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் அதனை நம்பி வாழும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.