இந்திய வெளிவுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்தியாவில் மட்டும் பிரியமான அரசியல்வாதி அல்ல, பாக்கிஸ்தானிலும் கூடதான். வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு தொடர்ச்சியான ட்வீட் பரிமாற்றத்தில், பாக்கிஸ்தானில் கராச்சியை சேர்ந்த பெண்ஒருவர் பதிவிட்டிருந்ததாவது, "சுஷ்மா ஸ்வராஜ் மீது மிகுந்த மரியாதையுகள் கொண்டுள்ளதாகவும். எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள் எனவும்" புகழ்ந்துள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜாப் ஆசிப் என்ற கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண், எனக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என பாகிஸ்தானின் இந்திய தூதரக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். மேலும், இதுக்குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்திலும், எனக்கு உடனடி சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்தியா செல்ல விசா கேட்டு விண்ணப்பம் செய்துள்ளதாகவும். தாங்கள் தான் அதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை பெற உடனடி விசா வழங்குமாறு உத்தரவிட்டார்.
இந்தச் செயலை கண்டு வியந்து கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட பெண் சுஷ்மா சுவராஜை, எங்கள் நாட்டு பிரதமர் ஆகுங்கள் என புகழ்ந்துள்ளார்.