கிராமங்களின் வளர்சிக்காக "60 நாள் ஆக்சன் திட்டம்" KCR அறிவிப்பு..

கிராமங்களை பசுமை மற்றும் சுகாதாரமிக்க கிராமங்களாக மேம்படுத்த 60 நாள் ஆக்சன் திட்டத்தை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்!!

Last Updated : Aug 4, 2019, 03:22 PM IST
கிராமங்களின் வளர்சிக்காக "60 நாள் ஆக்சன் திட்டம்" KCR அறிவிப்பு.. title=

கிராமங்களை பசுமை மற்றும் சுகாதாரமிக்க கிராமங்களாக மேம்படுத்த 60 நாள் ஆக்சன் திட்டத்தை முதல்வர் கே சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்!!

கிராமநிர்வாகத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து விவாதிக்க சனிக்கிழமை பிரகதி பவனில் பஞ்சாயத்து ராஜ் துறையின் அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின்னர் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்தார். இது ஒரு 'சக்தி வாரம்' மற்றும் ஹரிதா ஹராம் திட்டங்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என் கே.சி.ஆர் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ், மண்டல் பரிஷத், ஜில்லா பரிஷத் ஆகிய இடங்களில் உள்ள காலியிடங்களும் நிரப்பப்படும் என்றும், கிராம மேம்பாட்டுக்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்; 60 நாள் ஆக்சன் திட்டத்தின் ஒருபகுதியாக, மிசன் பாகிரதா(Mission Bhagiratha)) திட்டத்தின் கீழ், அனைவருக்கும், தூய்மையான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என்றார். "பஞ்சாயத்து ராஜ் சட்டம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள கடமைகள், அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை தெளிவாக வரையறுக்கவும், நிதி கொள்முதல் செய்வதை தெளிவாக சுட்டிக்காட்டவும் செய்யப்பட்டது. என்று அவர் கூறினார்.

ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என சந்திரசேகரராவ் தெரிவித்தார். சாலைகள் அமைக்கப்படும், தரமான கல்வி வழங்கப்படும் என்றும், சுகாதார வசதிகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். குழந்தை பிறந்த உடன், பிறப்புச் சான்றிதழோடு, சாதிச் சான்றிதழையும் சேர்த்து உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தெரிவித்திருக்கிறார். மேலும், 60 நாள் ஆக்சன் திட்டத்தின் கீழ் நடைபெறும், கிராம மேம்பாட்டு பணிகளை கண்காணிக்க, 100 பறக்கும் படைகள் அமைக்கப்படும் என்றும், இவர்கள், திடீரென ஆய்வு நடத்துவார்கள் என்றும்சந்திரசேகரராவ் கூறியிருக்கிறார்.

கிராம மேம்பாட்டுத் திட்டங்களை சரியாக முன்னெடுக்க தவறும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது, கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் தெரிவித்திருக்கிறார்.

 

Trending News