''நீட்'' தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது: மனித வள மேம்பாட்டுத் துறை தகவல்!

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது!

Last Updated : Jun 12, 2018, 04:19 PM IST
''நீட்'' தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது: மனித வள மேம்பாட்டுத் துறை தகவல்! title=

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்கை நீட் தேர்வு மூலம் சிபிஎஸ்இ  நடத்தி வருகிறது.

இந்நிலையில், மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது, தேசிய தேர்வு முகமை நடத்தும் என மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு இனி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வு தொடர்பான ஆர்.டி.ஐ. கேள்விகளுக்கு மனித வள மேம்பாட்டுதுறை பதில் அளித்துள்ளது.

Trending News