உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் நைனித்தால் ஆகிய இடங்களில் வெண் பனி சூழ்ந்துள்ளது.
இந்தியாவின் ஏரி மாவட்டம் என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது இமயமலைத்தொடரில் வீற்றிருக்கிறது. குமாவூங் என்றழைக்கப்படும் மலைகளுக்கு இடையே அமைந்துள்ள இந்நகரம் அற்புதமான ஏரிகளை வாய்க்கப்பெற்றிருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் நைனித்தால் சுற்றி பார்க்க வருவார்கள். தற்போது இந்த பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி முழுவதும் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இந்த பனிப்பொழிவு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் செல்லும் பாதை முழுவதும் பனி மூடி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Uttarakhand: Tourists visit Nainital as the region receives snowfall. (09.01.2019) pic.twitter.com/FcNO3zLn3Z
— ANI (@ANI) January 9, 2020
வடக்கிலிருந்து குளிர் காற்று வீசுவதால் இந்தியாவின் வடமேற்கு மற்றும் இமயமலை அடிவார பகுதிகளில் பனிப்பொழிவு அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.