பராக் ஒபாமா, எலோன் மஸ்க், கன்யே வெஸ்ட், கிம் கர்தாஷியன் மற்றும் பலரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!!
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி நட்சத்திரம் கிம் கர்தாஷியன், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் ராப்பர் கன்யே உள்ளிட்டவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் ஹேக் என்பது இணையசெயல்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. அரசின் தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுகிறார்கள். இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் தற்போது ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளனர். "எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்" என பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் நீக்கப்பட்டனர்.
READ | COVID-19 தடுப்பூசி பாதுகாப்பானது; ஜூலை இறுதிக்குள் தயாராகும்: ரஷ்யா
அதேபோல, ஒபாமா ட்விட்டர் பக்கத்திலும், ‘கொரோனாவின் காரணமாக நான் என்னுடைய சமூகத்துக்கு எல்லாத்தையும் திரும்ப வழங்கப் போகிறேன். என்னுடைய முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ள எல்லா பிட்காயின்களையும், நான் இரட்டிப்பாக திரும்ப அனுப்பப் போகிறேன்’ என குறிப்பிட்டிருந்தது.
You may be unable to Tweet or reset your password while we review and address this incident.
— Twitter Support (@TwitterSupport) July 15, 2020
இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம், ‘ட்விட்டர் கணக்குகளில் ஏற்பட்ட ஹேக் குறித்து தெரிந்தது. இதுகுறித்து நாங்கள் விசாரணை செய்துவருகிறது. அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் இதுகுறித்து விளக்கமளிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி முன்னணி வீரர் ஜோ பிடன், மைக் ப்ளூம்பெர்க் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உள்ளிட்ட பல தொழில்நுட்ப பில்லியனர்களின் போலி ட்வீட்களும் இந்த முரட்டுத்தனத்தில் அடங்கும். பிரபலங்களான கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி கிம் கர்தாஷியன் வெஸ்ட் ஆகியோரும் ஹேக் செய்யப்பட்டனர்.