புது டெல்லி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஜூலை மாதம் திங்கள்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ - CBSE) தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.
JEE Main 2020 மற்றும் NEET UG 2020 தேர்வுகள் குறித்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பு வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கொரோனா வைரஸ் (COVID-19) நாளுக்கு நாள் அதிக அளவில் பரவி வருவதால், இந்த தேர்வுகளை ஒத்திவைக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என்று அமைச்சகம் ஒரு முடிவை அறிவிக்க உள்ளது.
READ | 10-வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் மாணவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பு!
முன்னதாக, ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த திட்டமிடப்பட்ட தேர்வை ரத்து செய்யலாமா அல்லது ஒத்திவைக்கலாமா என்பது குறித்த முடிவு ஜூன் 23-க்கு முன்னர் எடுக்கப்படும் என்று சிபிஎஸ்இ (CBSE) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் (Ramesh Pokhriyal), என்.டி.ஏ (NTA), சி.பி.எஸ்.இ, (CBSE) மற்றும் பள்ளி கல்வித்துரையிடம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து தேர்வு அட்டவணை மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து விவாதங்களை நடத்தினார். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு தான், மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகளை (CBSE Exam) ரத்து செய்யுமாறு டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா அரசாங்கங்கள் மத்திய அமைச்சரை வலியுறுத்தியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ | மீதமுள்ள 12-ம் வகுப்பு CBSE தேர்வுகள் ரத்தாகுமா? உச்சநீதிமன்றத்தை நாடிய பெற்றோர்கள்
மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வை நடத்த CBSE அமைப்பின் முடிவு, லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்படுத்தி உள்ளது. மீதமுள்ள பாடங்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும், மேலும் உள் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களின் பெற்றோர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.