உ.பி ரெயில் விபத்து: இந்தியாவின் ரெயில் விபத்து பட்டியல்

உத்தரபிரதேசத்தில் பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Last Updated : Nov 21, 2016, 10:58 AM IST
உ.பி ரெயில் விபத்து: இந்தியாவின் ரெயில் விபத்து பட்டியல் title=

புக்ரயான் (உ.பி.,): உத்தரபிரதேசத்தில் பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து விபத்து பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

ரெயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி, உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல் மந்திரிகள் அகிலேஷ் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், நிதிஷ்குமார் ஆகியோர் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு விபத்து நடந்த இடத்துக்கு நேற்று மாலை சென்று நேரில் பார்வையிட்டார். விபத்து பற்றி ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், தண்டவாள விரிசலால் விபத்து நடந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று குறிப்பிட்டனர். 

இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்துகள்:-

* பீகார் ரெயில் விபத்து- ஜூன்-6, 1981

பிஹார் மாநிலம் பாக்மதி ஆற்றில் ஒரு பயணிகள் ரெயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 1000 பேர் பலியாயினர். இதுதான் நாட்டின் மிகவும் மோசமான ரெயில் விபத்து ஆகும்.

* பிரோசாபாத் ரெயில் விபத்து- ஆகஸ்டு-20, 1995

உத்தரபிரதேச மாநிலத்தில் ‘புருசோத்தம்’ எக்ஸ்பிரஸ் ரெயிலும், ‘கலிண்டி’ எக்ஸ்பிரஸ் ரெயிலும் மோதிக்கொண்ட விபத்தில் 400 பேர் பலி.

* கயிசால் ரெயில் விபத்து- ஆகஸ்டு-2, 1999

அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள கயிசால் என்ற இடத்தில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 290 பேர் பலியாயினர்.

* காணா ரெயில் விபத்து- நவம்பர்-26, 1998

பஞ்சாப் மாநிலம் காணா என்ற இடத்தில் ஏற்கனவே தடம்புரண்டு கிடந்த ரெயில் மீது ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.

* ஞானேஸ்வரி ரெயில் விபத்து- மே-28, 2010

மேற்குவங்காள மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் நாச வேலையால் ‘ஞானேஸ்வரி’ எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 148 பேர் உயிரிழந்தனர். 

Trending News