டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் செவிலியர்கள் இனி மலையாள மொழியில் பேசக்கூடாது எனவும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமானது (GIPMER) டெல்லியின் மிகப்பெரும் மருத்துவமனை (GB Pant Hospital) ஆகும். இங்கே பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினரால் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மலையாள மொழியில் (Malayalam Language) பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு செவிலியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ALSO READ | Coimbatore ESI மருத்துவமனை டீன், செவிலியர் காலில் விழுந்தது ஏன்?
செவிலியர் பணிக்கு கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்கின்றனர். நாடு முழுவதும் அதிகளவில் கேரளவாசிகள் செவிலியர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டெல்லியின் கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனையிலும் பெரும்பான்மையான செவிலியர்கள் மலையாளிகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்குள் மலையாள மொழி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நோயாளி ஒருவரிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மருத்துவமனையில் அலுவலக மொழியாக இந்தி அல்லது ஆங்கிலம் ஏதேனும் ஒன்றை தான் பயன்படுத்த வேண்டும், மலையாள மொழியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு செவிலியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
Govind Ballabh Pant Institute of Post Graduate Medical Education & Research, Delhi directs all its nursing personnel to use only Hindi&English for communication, warns of serious action if not done. It had received complaint against the use of Malayalam language in the institute pic.twitter.com/jQqCpqjOrn
— ANI (@ANI) June 5, 2021
மருத்துவமனையின் சுற்றறிக்கையில் செவிலியர்கள் மலையாள மொழி பேசுவதால் பிற நோயாளிகளுக்கு அது அசெளகரியத்தை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | Ugliest language: இந்தியாவின் மோசமான மொழி எது, உளரிய கூகுள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR