காஷ்மீரில் கடும் உறைபனி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. 

Last Updated : Jan 22, 2019, 10:37 AM IST
காஷ்மீரில் கடும் உறைபனி, இயல்பு வாழ்க்கை பாதிப்பு!! title=

ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் இன்று அதிகாலை முதலே பனிமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டிக் கிடக்கிறது. வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், பனிக்கட்டிகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கட்டிடங்களின் மேற்கூரை, வாகனங்கள் என அனைத்தும் பனி மூடிக் காணப்படுகின்றன. 

அதேபோல், உத்தரகாண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகள், வீடுகளின் கூரைகள் அனைத்தும் பனிப்போர்வை மூடிக் காணப்படுகிறது. இதனால், கடும் குளிர் நிலவுவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கியுள்ளது.

Trending News