அமேதியில் எதிர்க்கட்சியின் பணி வேடிக்கையானது மற்றும் எளிதானது என மக்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் பறிகொடுத்த ராகுல், வயநாட்டில் வெற்றி பெற்றார்.
அமேதி தொகுதியில், ஸ்மிருதி இராணியிடம் ராகுல் காந்தி தோல்வியடைந்தது அவருக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. இந்தநிலையில், பாராளுமன்றத் தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக நேற்று அமேதி மக்களவை தொகுதிக்கு ராகுல் காந்தி, தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அத்தொகுதிக்கு சென்றார்.
அமேதி தமது சொந்த ஊர், சொந்த வீடு போன்றது என்று புகழாரம் சூட்டிய ராகுல் காந்தி, அப்பகுதியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட உறுதி ஏற்றுக் கொண்டார். கட்சித் தொண்டர்களுடன் உரையாடிய அவர், தாம் வயநாடு எம்பியாக இருந்தாலும் அமேதிக்கும் தமக்குமான பந்தம் முப்பதாண்டுகளுக்கும் மேலானது என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி, அமேதியில் வென்று மத்திய அமைச்சராகியுள்ள ஸ்மிரிதி இரானி ஆகியோர் அமேதியில் உள்ள வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பின்னடவு போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
மேலும், "பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் யோகி ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்தவர். நாங்கள் இப்போது எதிர்க்கட்சியின் பணிகளைச் செய்ய வேண்டும். இது மிகவும் வேடிக்கையானது மற்றும் எளிதானது" என்று அவர் கூறினார்.
#WATCH Rahul Gandhi, Congress in Amethi: Narendra Modi is Prime Minister, Yogi ji is Chief Minister & Member of Parliament is from BJP (Smriti Irani). We have to do the work of opposition now, it is the most enjoyable, it is easy. (10.7.19) pic.twitter.com/Gg6zFQr4hE
— ANI UP (@ANINewsUP) July 11, 2019
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தோற்கடிக்கப்பட்டதிலிருந்து காங்கிரஸ் எதிர்க்கட்சியில் இருந்து வருகிறது. மேலும் இந்த பங்கு கட்சிக்கு வேடிக்கையாகவும் எளிதாகவும் இருந்தது. அமேதி வழக்கமாக காந்திகளுடன் பக்கபலமாக இருந்தாலும், குறிப்பாக உத்தரப்பிரதேசம் கடந்த பல தசாப்தங்களாக ஒரு காங்கிரஸ் முதல்வரைப் பார்க்கவில்லை. இப்போது, இந்த கோட்டையும் கூட கைவிடப்பட்டுள்ளது. ராகுலைப் பொறுத்தவரை, இங்குள்ள மக்களைச் சென்றடைவதற்கு இதுவே கூடுதல் காரணம். "நாங்கள் மக்கள் தொடர்பான பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும். பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் காங்கிரஸ் தொழிலாளர்கள் அமேதி மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.