பெண் சாதி மாறி காதலித்ததால் அவரை தெருவில் அரை நிர்வாணமாக அடித்து இழுத்து சென்ற காட்சி பெரும் பாபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
மத்தியப் பிரதேசம் அலிராஜ்புர் எனுமிடத்தில் சாதி மாறி காதலித்து வீட்டை விட்டு ஓடிப்போன இளம் பெண்ணை சேலையை உருவி அரை நிர்வாணக் கோலத்தில் ஊர்மக்கள் அடித்து ஊர்லமாக அழைத்துச் சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
அதில், ஆண்கள் குழுவாக ஒரு பெண்ணை அடிப்பதைக் காணலாம். அந்தப் பெண் நடந்து செல்லும் போது அவரை ஆண்கள் குச்சியை கொண்டு கமூடித்தனமாக தாக்குகின்றனர். வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறுவதை அந்த வீடியோவில் காணலாம். ஆனால், வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ இது என்றும் எவ்வித புகாரும் இதுவரை வரவில்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
Madhya Pradesh: In a video, a girl was seen being thrashed and paraded in Temachi village. Alirajpur SP Vipul Shrivastava says, "We are looking for the girl in the video. We have not received any complaint yet. We are also verifying the video." pic.twitter.com/omHkhLANDq
— ANI (@ANI) September 3, 2019
இது குறித்து காவல் அதிகாரி சூப்பிரண்டு விபுல் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்; "எங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வீடியோ கிடைத்தது. அந்த வீடியோ அலிராஜ்பூரின் தேமாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிலர் எங்களிடம் கூறினார்கள். வீடியோவில் காணப்பட்ட பெண்ணை நாங்கள் தேடிவருகிறோம். இதுவரை இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்" என அவர் கூறினார்.