டெல்லி நீதிமன்றத்தில் வைத்து பெண் வழக்கறிஞர் கற்பழிப்பு!

தெற்கு டெல்லியின் சாக்கெட் நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் ஒருவர் பெண் வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jul 15, 2018, 06:15 PM IST
டெல்லி நீதிமன்றத்தில் வைத்து பெண் வழக்கறிஞர் கற்பழிப்பு! title=

தெற்கு டெல்லியின் சாக்கெட் நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் ஒருவர் பெண் வழக்கறிஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் அறைக்கு குடிப்போதையில் வந்த மூத்த வழக்கறிஞர் பலவந்தமாக அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாக காவல்துறை கண்கானிப்பு ஆய்வாளர் ரோமில் பன்னையா தெரிவித்துள்ளார்.

நேற்று நல்லிரவு நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து பெண் வழக்கறிஞர், காவல்துறையினை அனுகி தொலைப்பேசி வாயிலாக புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண் வழக்கறிஞரிடம் இருந்து ஒலி வடிவ வாக்குமுலம் பெறப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட வழக்கறிஞரினை இவ்வழக்கு தொடர்பாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்து அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்து சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூத்த வழக்கறிஞர் 50 வயது மதிக்கத்தக்கவர் எனவும், பெண் வழக்கறிஞரின் புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அவர் சங்கம் விகார் பகதி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்!

Trending News