ரயில் வரும் நேரத்தை துல்லியமாக அறிய ஒரு புதிய கருவி பொறுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தவுடன் ரயில்வே அதிகாரிகள் நேர கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் அளிப்பார். அதன் பிறகு தான் பயணிகளுக்கு அந்த விவராம் அறிவிக்கப்படும். இதற்கான துல்லியமாக நேரத்தின் தகவல் பயணிகளுக்கு கிடைர்த்தது இல்லை.
இதனை சரிசெய்ய ரயில்களின் பயணிகள் துல்லியமாக அறிய Real-time Punctuality Monitoring and Analysis என்ற முறை ரயில்வே அமல்படுத்த உள்ளது. ரயில் எஞ்சின்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு வரும் நேரத்தை சரியாக அறிந்துகொள்ள முடியும்.
இந்த சோதனை முறையில் டெல்லி - கவுரா மற்றும் டெல்லி – மும்பை வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் ஜி.பி.எஸ். கருவி பொறுத்தப்படும். அதன் பின், விரைவில் நாடு முழுதும் படிப்படியாக அமல்படுத்தப்படும்.