ஜே.என்.யூ வன்முறை ஈடுபட்டதாக வைரலான பெண்ணை கண்டுபிடித்த ZEE நியூஸ்

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் முகமூடி அணிந்த பெண்ணை கண்டுபிடித்த ZEE நியூஸ். ஆனால் ஜே.என்.யுவில் வன்முறை நடந்த நேரத்தில், அவர் இல்லை என்று கூறுகிறார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 6, 2020, 11:04 PM IST
ஜே.என்.யூ வன்முறை ஈடுபட்டதாக வைரலான பெண்ணை கண்டுபிடித்த ZEE நியூஸ்
Zee Media

புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறைக்குப் பிறகு, முகமூடி அணிந்த பெண்ணின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த பெண் தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியதாக செய்திகள் மற்றும் நேட்டியான்கள் எழுதுகிறார்கள். இந்தநிலையில், ZEE நியூஸ் ஊடகம் அந்த பெண்ணைக் கண்டுபிடித்தது. உரையாடலின் போது, ​​அந்த பெண் தனது முழு விஷயத்தையும் உலகத்தின் முன் வைத்துள்ளார். வைரலாகி வரும் முகமூடி அணிந்திருந்த பெண்ணின் பெயர் ஷம்பவி. ஜே.என்.யுவில் வன்முறை நடந்த நேரத்தில் அவர் அங்கு இல்லை என்று ஷம்பவி கூறுகிறார். 

அதாவது சபர்மதி ஹாஸ்டலில் வன்முறை ஏற்பட்ட நேரத்தில், அந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்று கூறியுள்ளார். வன்முறை நடந்த அன்று மாலை 6.30 மணி அளவில் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்ட ஒரு சீட்டு அவரிடம் உள்ளது. பெரியார் ஹாஸ்டலில் தாக்குதல் நடந்தபோது தான் காயமடைந்ததாக அவர் கூறினார். மேலும் எண்ணைக் குறித்து வைரலாகி வரும் வீடியோ உண்மை இல்லை என்று ஷம்பவி குற்றம் சாட்டினார். 

அந்த பெண் இன்றும் அதே சட்டை தான் அணிந்திருக்கிறாள். ஆனால் வீடியோவில் உள்ள சட்டையின் நிறம் மற்றும் இவரது சட்டையின் நிறம் இரண்டும் வேறுபட்டவை.

ஜே.என்.யூ வன்முறையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த டெல்லி காவல்துறை:

வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் பதிவவில், கடந்த சில நாட்களாக விடுதி கட்டணம் அதிகரிப்பதை எதிர்த்து ஜே.என்.யூ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி, நிர்வாகத் தொகுதியின் 100 மீட்டர் சுற்றளவில் எந்த எதிர்ப்பும் அனுமதிக்கப்படவில்லை. சில மாணவர்கள் பெரியார் ஹாஸ்டலில் கூடிவந்ததாகவும், அங்கிருந்தவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் ஜனவரி 5 ஆம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழு நிர்வாகத் தொகுதியில் நிறுத்தப்பட்டதாக பதிவில் கூறப்பட்டு உள்ளது. 

இன்ஸ்பெக்டர்கள் மற்ற போலீஸ்காரர்களுடன் பெரியார் ஹாஸ்டலை அடைந்தனர், அங்கு சுமார் 50 பேர் முகமூடி அணிந்துக்கொண்டு, கையில் தடி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். கும்பல் ஹாஸ்டலில் இருந்த மாணவர்களை அடித்து சொத்துக்களை சேதப்படுத்தியது. ஆனால் அவர்கள் அனைவரும் போலீஸைப் பார்த்து ஓடிவிட்டனர். 

இரவு 7 மணியளவில் சபர்மதி ஹாஸ்டலில் மாணவி-மாணவர்கள் தாக்கப்படுவதாகவும், அடிப்பதாகவும் வன்முறை குறித்து தொடர்ந்து பி.சி.ஆர்-க்கு (PCR) அழைப்பு வந்தது. 

அங்கு சென்ற போலீசார் வன்முறை கும்பலுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால் வன்முறை கும்பல் மாணவர்களை தாக்க தொடங்கினார்கள் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி விட்டு அவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். பல மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களை எய்ம்ஸுக்கு (AIIMS) கொண்டு செல்லப்பட்டனர். பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தில் ஐபிசியின் 145, 147, 148 149, 151 மற்றும் பிரிவு 3 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜே.என்.யூ வன்முறை குறித்து டெல்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது