புதுவையில் விரைவில் வருகிறது IT Park - முதல்வர் அறிவிப்பு!

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப பூங்கா-வை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 3, 2018, 04:46 PM IST
புதுவையில் விரைவில் வருகிறது IT Park - முதல்வர் அறிவிப்பு! title=

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப பூங்கா-வை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!

புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய அவர் புதுவை மாணவர்களின் வேலை வாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்ப பூங்காவை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்ப பூங்கா வருகையால் பல பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும், இதற்கான திட்டங்கள் முடிந்துவிட்டதாகவும் விரைவில் கட்டமைப்பு வேலைகள் துவங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்., 3 அன்று காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் தொழில்நுட்ப கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட அவர் விழாவில் பேசுகையில் இந்த இந்த தொழில்நுட்ப பூங்கா குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்

மாணவர்களி முன்னேற்றத்திற்கு தேவையான வசதிகளுடன் இந்த தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்த அவர் தேசிய அளவில் கல்விக்கான கட்டமைபில் 5-வது இடத்தில் இருக்கும் புதுச்சேரியினை முதன்மை நிலைக்கு கொண்டு வருவதே அரசின் நோக்கம் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அதேவேலையில் புதுவை அரசானது விரைவில் காமராஜர் பல்கலை., க்கு நிரந்தர விளையாட்டு மைதானம் அமைக்கும் வகையில் தேவையான நிலம் வாங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான செயல்பாடுகள் நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News