Tamilnadu Government farmers subsidy scheme | விவசாயிகள் பயன்பெறும் வகையில் பவர் டில்லர் மற்றும் பவர் வீடர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இராயிருந்தாதேவி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் பவர் டில்லர் மற்றும் விசை களையெடுக்கும் கருவியான பவர் வீடர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு. வேளாண் உற்பத்தியையும், விவசாயிகளின் நிகர வருமானத்தையும் அதிகரித்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதோடு. குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் வழிவகுக்கப்படுகிறது.
மேலும் படிக்க | கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டம், விண்ணப்பிக்க 31 ஆம் தேதி கடைசி
நடப்பு 2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் அறிவித்தவாறு தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 4,000 எண்கள், விசைக் களையெடுக்கும் கருவி (பவர் வீடர்) 4,000 எண்கள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் பெற அதிகபட்சமாக ரூ.1.20 இலட்சமும், விசைக்களை எடுப்பான்களுக்கு அதிகபட்சமாக ரூ.63 ஆயிரமும், அல்லது கருவியின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச விலை அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இத்திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு அவர்களின் பங்களிப்புத் தொகையினை குறைத்து உதவிடும் வகையில் நடைமுறையில் உள்ள மானியத்துடன் 20 சதவீத கூடுதல் மானியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு. குறு விவசாயிகளுக்கு பவர்டில்லர்கள் வாங்கிட 20 சதவிகித கூடுதல் மானியமாக ரூ.48,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட கூடுதல் மானியமாக ரூ.25,200/-ம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே பவரிடில்வர்கள் வாங்கிட அதிகபட்சமாக ரூ.1.68,000/-ம், விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.88,200/-ம் வரை மானியம் ஆதி திராவிடர், பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
உதாரணமாக பவர் டில்லரின் மொத்த விலை தோராயமாக ரூ.240000/- எனில் ரூ.1.68.000/- மானியம் போசு மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.72,000/- மட்டும் செலுத்தினால் போதும். விசைக்களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.1,30,000/- எனில் ரூ.88,200/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.41,800/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
பொது பிரியினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நடைமுறையில் உள்ள மானியத்துடன் 10 சதவீத கூடுதல் மானியம் அதிகபட்சமாக ரூ.12,000/- விசைக்களை எடுக்கும் கருவி வழங்கப்படுகிறது. எனவே, ஒட்டுமொத்தமாக விசைக்களை எடுக்கும் கருவி வாங்கிட அதிகபட்சமாக ரூ.75,600/- வரை மானியம் பொது பிரிவினைச் சார்ந்த சிறு. குறு விவசாமிகளுக்கு வழங்கப்படுகிறது. உதாரணமாக விசைக் களை எடுக்கும் கருவியின் மொத்த விலை தோராயமாக ரூ.80.000/- எனில் ரூ.48.000/- மானியம் போக மீதி விவசாயிகளின் பங்களிப்பாக ரூ.32,000/- மட்டும் செலுத்தினால் போதும். மேலும் இம்மானியத்தொகையானது இயந்திரங்களின் மொத்த விலைக்கு தகுந்தவாறு மாறுபடும்.
விவசாயிகள் தங்களின் பங்களிப்பு தொகையினை இணையவழி (RTGS/NEFT) அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கோ அல்லது விநியோகஸ்தருக்கோ அல்லது முகவருக்கோ செலுத்தி பவல்டில்லர், விசைக்களை எடுக்கும் கருவி போன்ற வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், 5த்திட்டம் தொடர்பாக முழு விவரங்களை பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் மாவட்ட செயற் பொறியாளர். வேளாண்மை பொறியியல் அலுவலகம் அல்லது வருவாய் கோட்ட அளவில் உள்ள சேலம், மேட்டூர். ஆத்தூர் மற்றும் சங்ககிரியில் செயல்படும் உதவி செயற் பொறியாளார் வேளாண்மை பொறியியல் அலுவலகம் அல்லது வட்டார அளவில் உதவி பொறியாளர் வேளாண்மை பொறியியல் அல்லது இளநிலை பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ