கர்நாடகா சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை 8- மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே 114 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால், அக்கட்சிக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. மற்ற கட்சிகளின் உதவி இல்லாமல் பாஜக ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேபோன்று, காங்கிரஸ் 62 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 43 இடங்களிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் இருக்கும் பெங்களுரில் உள்ளிட்ட பல தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே தற்போது முன்னிலை வகிக்கிறது. த
காந்தி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் குண்டு ராவ் முன்னிலை வகிக்கிறார். அதேபோன்று, சி வி ராமன் நகரில் பாஜக கட்சியின் எஸ் ராகு முன்னிலை வகிக்கிறார். சாந்தி நகரில் காங்கிரஸ் கட்சியின் என் எ ஹாரிஸ் முன்னிலை வகிக்கிறார்.
புலிகேசி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகந்த ஸ்ரீனிவாச மூர்த்தி முன்னிலை வகிக்கிறார். சர்வக்ஞா நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் சிவாஜி நகரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஷன் முன்னிலை வகிக்கிறார். மேலும் தமிழர்கள் இருக்கும் அதிகம் இருக்கும் சிக்பேட் பகுதியில் பாஜக கட்சியின் உதய் பி கருடாச்சார் முன்னிலை வகிக்கிறார்.