பெண்களுக்கு இரும்பு சத்தினை அதிகப்படுத்தும் 5 உணவுகள்!

பல்வேறு காரணங்களினால் பெண்களுக்கு உடலில் உள்ள இரும்புச்சத்து குறையலாம். இதை சில உணவுகளால் சரிசெய்ய முடியும். 

Written by - Yuvashree | Last Updated : Dec 8, 2023, 04:16 PM IST
  • பல பெண்கள் இரும்பு சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்படுவர்.
  • கீரை வகை உணவுகள் லிஸ்டில் உள்ளது.
  • வேறு என்னென்ன உணவுகளை சாப்பிடலாம்?
பெண்களுக்கு இரும்பு சத்தினை அதிகப்படுத்தும் 5 உணவுகள்!  title=

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களிலும் கர்ப்ப காலங்களிலும் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவர். இதனால் அவர்களுக்கு ரத்த இழப்பும் ஏற்படும். பெண்களுக்கு, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உகந்த இரும்பு சத்தினை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகும். இரும்புச்சத்து குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். இரத்த சோகையைத் தடுக்கவும், ஆற்றல் அளவை பராமரிக்கவும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். பெண்களின் இரும்பு அளவை கணிசமாக அதிகரிக்கக்கூடிய சில உணவுகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

1.கீரை வகை உணவுகள்:

கீரை வகை உணவுகள், இரும்புச்சத்து அதிகமாக உள்ளதாக சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனை, வெவ்வேறு வகைகளில் செய்து சாப்பிடலாம். கீரை போன்ற தாவர வகை காய்கறிகளில் நான்-ஹெமே வகை இரும்பு சத்துக்கள் உள்ளன. இதனுடன் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்திருக்கும் உணவுகளை சாப்பிடவதால் பெண்களுக்கு இரத்த சுத்திகரிப்பும் ஏற்படும். இதனை, சாலட், ஸ்மூதி, புலாவ் ஆக செய்து சாப்பிடலாம். 

2.பருப்பு வகை உணவுகள்:

உடலில் இரும்பு சத்தினை அதிகரிக்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பருப்பு வகைகளை தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் நார்சத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. சாம்பார், கூட்டு, சூப் என பருப்பு வகை உணவுகளை விதவிதமாக சாப்பிடலாம். உங்கள் டயட்டில் இந்த உணவினை சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உடலில் உள்ள அயர்ன் சத்துக்கள் அதிகரிக்கும். 

3.பூசணி விதைகள்:

பழங்கள், காய்கள் மட்டுமல்ல அதன் விதைகள் கூட பல விதங்களில் நம் உடலில் சத்துக்களை ஏற்ற உதவுகின்றன. அப்படிப்பட்ட உணவுகளில் ஒன்றுதான் பூசணியும் அதன் விதையும். பூசணி விதையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. சிற்றுண்டிக்கு வசதியான உணவுகளுள் இதுவும் ஒன்று. இதை காலை வேளையில் சாலட் ஆக தயாரித்து சாப்பிடலாம். இதை தயிரிலும் கலந்து சாப்பிடுவதால் பெண்களின் உடலுக்கு பயணளிக்கும் சத்துக்களை கொடுக்கிறது. மேலும், பூசணி விதைகள் மற்ற அத்தியாவசிய தாதுக்களைக் கொண்டிருக்கின்றன, அவை இரும்பு சத்து உட்கொள்ளலை அதிகரிக்க விரும்பும் பெண்களுக்கு உணவில் நிறைய நன்மைகளை பயக்கும்.

மேலும் படிக்க | இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஆரஞ்ச் பழத்தை சாப்பிட வேண்டாம்!

4.குயினோவா:

குயினோவோவை தானிய மாதிரி என்றும் குறிப்பிடுவர். இதில் நார்ச்சத்துக்களும் புரத சத்துக்களும் அதிகரித்து காணப்படுகிறது. அது மட்டுமல்ல, உடலில் இரும்பு சத்தினை அதிகரிக்கவும் குயினோவா உதவுகிறது. இதனை சாலட், காய்கறி கூட்டு ஆகியவற்றில் கலந்து சாப்பிடலாம். இதில் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள கொழுப்பு கரைக்கவும் உதவுகிறது. உங்கள் டயட்டில் தாவர வகையிலான உணவுகளை சேர்க்க விரும்பினால், இதையும் அதனுடன் சேர்த்துக்கொள்ளவும். 

5.அதிகம் கொழுப்பற்ற இறைச்சிகள்:

அசைவ உணவு பிரியர்களுக்கள் இறைச்சிகள் சாப்பிடுவதன் மூலமாகவும் இரும்பு சத்தினை வளர்த்துக்கொள்ளலாம். ஆனால், கொழுப்பு அதிகம் இல்லாத, அதிகம் பதப்படுத்தப்படாத இறைச்சிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கோழி இறைச்சி, வான்கோழி போன்றாவற்றில் Heme Iron என்ற சத்து உள்ளது. மேற்குறிப்பிட்ட இறைச்சிகளை சாப்பிடுவதால் அதில் இருக்கும் 30 சதவிகித இரும்பு சத்துக்களை நீங்கள் உறிஞ்சிக்கொள்ள முடியும். மேலும், இதனால் உங்கள் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். இந்த வகை உணவுகளை சாப்பிடுகையில் கண்டிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதாகும். 

மேலும் படிக்க | இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை வேகமாக குறையுமா? பதில் இதுதான்!

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News