இந்த திட்டத்தில் 6.7% வட்டி பெறலாம், துளி கூட ரிஸ்க் கிடையாது

Post Office Time Deposit Account: இந்தத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு ஆண்டுகளுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 13, 2022, 02:05 PM IST
  • மோடி அரசில் இந்தத் திட்டத்தில் 6.7% வட்டி.
  • முதலீடு ஆபத்து இல்லாமல் பலனளிக்கும்.
  • போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் கணக்கு.
இந்த திட்டத்தில் 6.7% வட்டி பெறலாம், துளி கூட ரிஸ்க் கிடையாது title=

போஸ்ட் ஆபீஸ் திட்டம்: முதலீட்டின் மூலம் மக்கள் தங்கள் பணத்தில் நல்ல வருமானத்தைப் பெற விரும்புகிறார்கள். இருப்பினும், இதனுடன், மக்கள் ஆபத்து இல்லாமல் வருமானத்தை சம்பாதிக்க விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ரிஸ்க் இல்லாமல் வருமானம் பெற விரும்பினால், போஸ்ட் ஆபீஸ் பல சிறந்த திட்டங்களை வழங்கி வருகின்றது. மத்திய அரசின் கீழ் அஞ்சலகப் பணிகள் நடைபெற்று வருவதுடன், மோடி அரசின் ஆட்சிக் காலத்தில் தபால் துறையின் பல திட்டங்களில் சிறப்பான வருமானம் கிடைத்து வருகிறது. இந்த திட்டங்களில் ஒன்று போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் கணக்கு ஆகும்.

இந்தத் திட்டத்தின் மூலம், முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு ஆண்டுகளுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. 1 ஆண்டு, 2 ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் கணக்கில் பணத்தை முதலீடு செய்யலாம். இந்தக் கணக்கில் பணத்தை முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தகக்கது.

மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை

இந்தத் திட்டத்தில் பணம் முதலீடு செய்யப்பட்டால், 1 வருடத்திற்கு 5.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும். அதே நேரத்தில், இந்தத் திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு 5.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இது தவிர இத்திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு 5.8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஐந்தாண்டுகளுக்குப் பணத்தை முதலீடு செய்தால், 6.7 சதவீத வட்டி வழங்கப்படும்.

போஸ்ட் ஆபிஸ் அசத்தல் திட்டம்! வெறும் ரூ.417 முதலீடு செய்து ஒரு கோடி பெற வாய்ப்பு!

அதேபோல் இந்தத் திட்டத்தில் இந்தியக் குடிமகன் எவரும் கணக்கைத் தொடங்கலாம். அதே நேரத்தில், இந்தத் திட்டத்தின் பலனை தனியாகப் பெறலாம் அல்லது கூட்டுக் கணக்கைத் தொடங்குவதன் மூலமும் பெறலாம். அதே நேரத்தில், 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளும் இதில் கணக்கைத் திறந்து செயல்படலாம்.

இந்த திட்டத்தில், வட்டி ஆண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இத்திட்டத்தில் கணக்கு தொடங்க குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகக்கது.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News