அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற 71வது பிரபஞ்ச அழகி போட்டியில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் R'bonney Gabriel வென்றுள்ளார். இதில் 86-க்கும் மேற்பட்ட பெண்கள் உலக பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக போட்டியிட்ட நிலையில், அமெரிக்காவின் R'bonney Gabriel இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். அதே நேரத்தில், வெனிசுலாவின் டயானா சில்வா இரண்டாவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதற்கிடையில் இந்தப் போட்டியில் இந்தியாவை ரிபிரேசெண்ட் செய்த திவிதா, தனது ஆடையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தார், அதில் அவர் 'சோன் சிரியா' உடையணிந்து வந்தார். தொழில்முறை மாடல் திவிதா ராய் கர்நாடகாவில் வசிப்பவர் ஆவார், மேலும் இவர் மிஸ் திவா அமைப்பின் 10-வது ஆண்டு விழாவில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று, ராய் மிஸ் திவா யுனிவர்ஸ் 2022 பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முன்னால் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோ!!
இந்தியா இதுவரை எத்தனை முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளது?
1994 இல் தொடங்கிப்பட்ட பிரபஞ்ச அழகி போட்டியில், இந்தியா மூன்று முறை பட்டத்தை வென்றுள்ளது. பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் இந்த பட்டத்தை வென்று இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி ஆனார். அவருக்குப் பிறகு, லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார். 2021 ஆம் ஆண்டில், ஹர்னாஸ் சந்து மூன்றாவது பட்டத்தைப் பெற்றார்.
கிரீடத்தின் மதிப்பு என்ன?
மிஸ் யுனிவர்ஸ் 2022 கிரீடத்தின் விலை $6 மில்லியன் அதாவது சுமார் ரூ.49 கோடி ஆகும். இந்த முறை கிரீடம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் 'ஃபோர்ஸ் ஃபார் குட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரீடத்தை மௌவாட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் பெண்களால் தயாரிக்கப்பட்ட எதிர்காலம் சாத்தியக்கூறுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை இந்த கிரீடம் காட்டுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பையில் லிவா பிரபஞ்ச அழகி (லிவா மிஸ் திவா யுனிவர்ஸ்) போட்டி நடந்தது. அதில் கர்நாடகாவை சேர்ந்த மாடல் அழகி திவிதா ராய் லிவா பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அந்த விழாவில் 2021 ஆம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற ஹர்னாஸ் கவுர் சந்து கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | முகம்சுளிக்கும் படியான மானுஷி சில்லரின் கவர்ச்சி புகைப்படம்: See pic
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ