அமெரிக்க நூலகத்தில் திருடப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான பைபிள் புத்தகத்தை மத்திய புலனாய்வு போலீசார் நெதர்லாந்தில் மீட்டனர்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிட்ஸ்பர்க் நகரில் கார்னிஜே என்ற நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் பழமைவாய்ந்த புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1990-ம் ஆண்டு இந்த நூலகத்தில் ஆவண காப்பாளராக பணியாற்றிய ஒருவரும், அவரது நண்பரும் இணைந்து 8 மில்லியன் டாலர் மதிப்புடைய 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை திருடி சென்றனர். அதில் அந்த 404 ஆண்டுகள் பழமையான பைபிளும் அடங்கும்.
இதையொட்டி கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வு போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். இந்த நிலையில், நெதர்லாந்தில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில், கார்னிஜே நூலகத்தில் இருந்து திருடப்பட்ட 404 ஆண்டுகள் பழமையான பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.