உலக அளவில் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் ஒரு இந்தியர்!

"எனது தீவிர ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக இந்த பெருமையை அடைந்துள்ளேன்" - கவுஹர் கான்

Updated: Dec 9, 2017, 11:26 AM IST
உலக அளவில் கவர்ச்சிகரமான பெண்கள் பட்டியலில் ஒரு இந்தியர்!
Image Courtesy: IANS

உலக அளவில் கவர்ச்கரமான ஆசிய பெண்கள் பட்டியலில், தொடர்ந்து 4 வது முறையாக பாலிவுட் மாடல் கவுஹர் கான் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்ட வருடாந்திர இங்கிலாந்து ஆணைய வாக்கெடுப்பின் படி வந்த முடிவில், பாலிவுட்டின் நடிகை மற்றும் மாடல் கவுஹர் கான் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் புகழ்பெற்ற இவர், இப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து, இந்த 34 வயது பதுமை கூறுகையில்... "எனது தீவிர ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவு காரணமாக இந்த பெருமையை அடைந்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கருத்துகணிப்பானது முழுக்க முழுக்க ரசிகர்களின் தேர்வின் அடிப்படையிலேயே நடக்கின்றது. எனவே எனக்கு கிடைத்த இப் பெருமையானது ரசிகர்களிடம் இருந்து நேரடியாகவே பெற்றது போல உணர்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.