Free Data: புதிதாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு Airtel வழங்கும் இலவச Data!!

‘Airtel Thanks App’ மூலம், 219 ரூபாய் மற்றும் அதற்கு மேலான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ள பயனர்கள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2020, 04:39 PM IST
  • ரீசார்ஜ் செய்யப்பட்ட எண்ணில் SMS மூலம் பயனர்கள் தங்கள் வெற்றியைப் பற்றி தெரிவிக்கப்படுவார்கள்.
  • பயனர்கள் சலுகை தகவல் பெறும் அதே நாளில் ரீசார்ஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இலவச Data கூப்பன்கள் வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
Free Data: புதிதாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு Airtel வழங்கும் இலவச Data!! title=

பாரதி ஏர்டெல் இந்தியாவில் தனது ப்ரீபெய்ட் சப்ஸ்க்ரைபர்களுக்கு இலவச Data கூப்பன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Airtel Thanks App’ மூலம், 219 ரூபாய் மற்றும் அதற்கு மேலான ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ள பயனர்கள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு இந்த ஆஃபர் வழங்கப்படும்.  

முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் பயனர்களுக்கு இலவச Data கூப்பன்கள் வழங்கப்படும் என்றும் இது ‘My Coupons option’-ன் கீழ் உள்ள ‘Airtel Thanks App’-ல் பட்டியலிடப்படும் என்றும் ஏர்டெல்லின் (Airtel) அதிகாரப்பூர்வ தளத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ .219, ரூ .249, ரூ .279, ரூ .298, ரூ .349, ரூ .398 மதிப்பிலான ப்ரீபெய்ட் ப்ளான்களை வாங்கும் ஏர்டெல் சப்ஸ்க்ரைபர்களுக்கு 1GB டேட்டாவுக்கான இரண்டு கூப்பன்கள் (Coupon) வழங்கப்படும். ஒவ்வொன்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ALSO READ: ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயம்!

ரூ .399, ரூ 449 மற்றும் ரூ .588 ப்ரீபெய்ட் பிளான்களை வைத்திருக்கும்  வாடிக்கையாளர்கள் நான்கு 1 ஜிபி Data கூப்பன்களைப் பெறுவார்கள், ஒவ்வொன்றும் 56 நாட்கள் செல்லுபடியாகும்.

மேலும், நீண்ட கால ரூ .588 மற்றும் ரூ .698 ப்ரீபெய்ட் பிளான்களுக்கு, ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு 1 GB டேட்டாவின் 6 கூப்பன்கள் கிடைக்கும். ஒவ்வொன்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும்.

ஏர்டெல் நிர்ணயித்த தகுதி அளவுகோல்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே தரவு கூப்பன்கள் வழங்கப்படும்.  தினசரி வெற்றியாளர்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. ஆனால் இந்த போட்டியில் ஒரு பயனர் ஒரு முறைதான் வெற்றியாளராக முடியும் என இந்த ஆஃபருக்கான நிபந்தனைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் செய்யப்பட்ட எண்ணில் SMS மூலம் பயனர்கள் தங்கள் வெற்றியைப் பற்றி தெரிவிக்கப்படுவார்கள். பயனர்கள் சலுகை தகவல் பெறும் அதே நாளில் ரீசார்ஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களின் தகுதிக்கான விதிகள் அடுத்த நாள் மாறிவிடக்கூடும். 

Trending News