பெட்ரோல் விலையை பின்னுக்கு தள்ளிய பால் விலை.. 1 லிட்டர் ₹.140 மட்டும்!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசலை விட அதிகமாக ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்!!

Last Updated : Sep 11, 2019, 03:39 PM IST
பெட்ரோல் விலையை பின்னுக்கு தள்ளிய பால் விலை.. 1 லிட்டர் ₹.140 மட்டும்! title=

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசலை விட அதிகமாக ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல்!!

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசலை விட அதிகமாக ஒரு லிட்டர் பால் 140 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொகரம் பண்டிகையை ஒட்டி, பால், மோர் பந்தல்களை பலரும் தன்னார்வத்தோடு அமைப்பது வழக்கம். இதற்காக பாலின் தேவை அதிகரித்ததையடுத்து சிந்து, கராச்சி ஆகிய இடங்களில் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் பால் 120 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விலை அதிகரித்தபோதும் பால், மோர் தானத்தை கைவிடாத பலரும் அதிக விலை கொடுத்து வாங்க நேர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 113 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 91 ரூபாய்க்கும் விற்கப்பட்ட நிலையில், அவற்றை விட பாலின் விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பாகிஸ்தானின் மிகவும் சரிவடைந்த பொருளாதார நிலையை இந்தப் பால் விலை காட்டுவதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி, ஆலோசனை வழங்க, தங்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளதாக, சமீபத்தில் பன்னாட்டு நிதியம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், பால் விலையைக் கட்டுப்படுத்தும் கராச்சி கமிஷனர் இப்திகார் ஷல்வானி நிர்ணயித்த விலை ரூ.94 என கூறப்படுகிறது. அதையும் தாண்டி, 140 ரூபாய்க்கு பால் விற்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

 

Trending News