நோர்வேயில் கார் திருடும் முயற்சியின் போது உதவிக்கு காவலரை அளித்த இரண்டு திருடர்கள்....
நோர்வேயில் திருட சென்ற இடத்தில், காருக்குள் மாட்டிக்கொண்ட திருடன் காவல் அதிகாரிகளை உதவிக்கு அழைத்த சம்பவம் நார்வேயில் நடந்துள்ளது. நார்வேவில் உள்ள ட்ரோந்தேலாக் என்னும் இடத்தில் இந்த நகைச்சுவையான சம்பவம் நடந்துள்ளது.
காலை 8 மணியளவில் 17 வயதான இளைஞரிடம் இருந்து காருக்குள் மாட்டிக் கொண்டதால், தன்னை காப்பாற்றும் படி அழைப்பு வந்ததாக காவல்துறையினர் கூறினார்.
'டீலர்ஷிப்பில் இருந்து காரை திருட சென்ற அந்த இளைஞர், காரில் இருந்து வெளியேவர இயலாததால், போலீஸாரை உதவிக்கு அழைத்துள்ளார். அந்த போலீஸ்காரர்கள் இளைஞர்க்கு ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால், அவர்கள் உதவுவார்கள் என எண்ணியுள்ளார்' என ட்ரோந்தேலாக் காவல்துறையை சேர்ந்த எப்பி கிமோ தெரிவித்தார்.
மேலும் நாங்கள் அவரது நண்பரை போல் அவரை மீட்போம் என அந்த இளைஞர் எண்ணியுள்ளார் என அந்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இளைஞரை போலீஸார், விசாரித்து பின் அவனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.