சனி செவ்வாய் சேர்க்கை; அடுத்த 15 நாட்களுக்கு இந்த 3 ராசியினர் அவதிப்படுவீர்கள்

ஜோதிடத்தில், சனி மற்றும் செவ்வாய் இணைவது அசுபமாகக் கருதப்படுகிறது, சனியின் இந்த சேர்க்கை மிகவும் கவலை அளிக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 2, 2022, 12:30 PM IST
  • செவ்வாய் சனி சேர்க்கை: கவனம் தேவை
  • இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
  • திருமண வாழ்க்கையை பாதிக்கலாம்.
சனி செவ்வாய் சேர்க்கை; அடுத்த 15 நாட்களுக்கு இந்த 3 ராசியினர் அவதிப்படுவீர்கள் title=

ஜோதிடத்தில், சனி மற்றும் செவ்வாய் இரண்டும் மிக முக்கியமான கிரகங்களாகக் கருதப்படுகின்றன. சனியின் அசுப நிலை நிதி, மன, உடல் வலியை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் செவ்வாயின் அசுப நிலை ஒரு நபரின் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். இந்த மாதம், அதாவது மே 2022 சனி மற்றும் செவ்வாய் இணையத் தொடங்குகிறது, இது மிகவும் ஆபத்தான நிலையாகும். இந்த இரண்டு கிரகங்களும் கும்ப ராசியில் இணைந்திருப்பதால் 3 ராசிக்காரர்கள் அவதிப்பட நேரிடும். எனவே அடுத்த 15 நாட்களுக்கு எந்த நபர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

செவ்வாய் சனி சேர்க்கை: கவனம் தேவை
சனியும் செவ்வாயும் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் எதிரிகளும் கூட. இப்படிப்பட்ட நிலையில் இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பதால் சண்டை போர் போன்ற சூழ்நிலை உருவாகும். அதனால்தான் அவற்றின் சேர்க்கை துவாண்ட யோகம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் கெடு பலன் தரும். இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலக்கட்டத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்

கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு சனி-செவ்வாய் இணைவது நல்லதல்ல. நீங்கள் விபத்துக்கள், காயங்களுக்கு பலியாகலாம். பணியிடத்தில் ரிஸ்க் எடுக்காமல் இந்த நேரத்தை பொறுமையாக எடுத்துக்கொள்வது நல்லது.

கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு சனி-செவ்வாய் சேர்க்கை ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே உடல் நலத்தில் மிகுந்த கவனம் தேவ்வை. சத்துள்ள பொருட்களை உண்ணுங்கள். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். 

கும்பம் - இந்த ராசியில் செவ்வாய் - சனி சேர்க்கை மிகுந்த சிரமங்களை தரப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் கசப்பாகப் பேசுவதையும், அகங்காரமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் கஷ்டங்களை சந்திக்க நேரிடும். வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

கும்ப ராசியில் செவ்வாய்-சனி சேர்க்கை
* ஜோதிடர்களின் கூற்றுப்படி, சனி பகவான் தற்போது கும்ப ராசிக்கு மாறியுள்ளார். செவ்வாய் ஏற்கனவே இந்த ராசியில் அமைந்துள்ளது. இந்த வகையில் கும்பத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை உருவாகி வருகிறது. இந்த இணைப்பு மே 17 வரை நீடிக்கும்.

* இதன் பிறகு செவ்வாய் தனது ராசியை மாற்றி மீன ராசியில் பிரவேசிப்பார். சனி-செவ்வாய் ஒரே ராசியில் இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் இருந்தால் கெடுபலன்கள் ஏற்படலாம். 

* முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வன்முறை தொடர்பான சம்பவங்கள் அதிகரிக்கலாம்.

* மாறிவரும் வானிலை காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். வெப்ப சலனம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படும். பங்குச் சந்தையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். அண்டை நாடுகளில் பதற்றம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News