காத்து கருப்பு நீக்கும் பச்சை மிளகாய் திருஷ்டியின் மகிமைகள்..!

பச்சை மிளகாய் திருஷ்டி | வீட்டில் யோகமில்லாமல், சண்டை சச்சரவுகளாகவே இருக்கிறது என்றால் பச்சை மிளகாய் மூலம் திருஷ்டி கழித்தால் தீய சக்திகள் வெளியேறிவிடும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 25, 2024, 01:28 PM IST
  • பச்சை மிளகாய் திருஷ்டி கழிக்கும் முறைகள்
  • வீட்டில் அசௌகரியம் இருந்தால் செய்யுங்கள்
  • எல்லோரும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்
காத்து கருப்பு நீக்கும் பச்சை மிளகாய் திருஷ்டியின் மகிமைகள்..! title=

திருஷ்டி கழிக்கும் பழக்கத்தை நீங்கள் உங்களின் அண்டை வீடுகளில் பார்த்திருப்பீர்கள். ஏன் நீங்களும் கூட திருஷ்டி கழிப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கலாம். வீட்டில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவுகளாகவே இருக்கிறது, மனக்கஷ்டம், பணக்கஷ்டம் எல்லாம் வாட்டி வதைக்கிறது என்ற புலம்பல் சத்தங்கள் அதிகரிக்கும்போது உடனே திருஷ்டி கழிக்க வேண்டும். இதற்கு தீய சக்திகளும், கண் திருஷ்டியுமே காரணம். பொறாமை எண்ணங்கள், கெட்ட வஸ்துகள் உங்களை நெருங்கும்போது இத்தகைய எண்ணங்கள் எழும். அப்படியிருக்கையில் எளிய பரிகாரமான திருஷ்டி மூலம் கெட்ட வஸ்துகளை உங்களிடம் இருந்து விலக்கி வைக்க முடியும். திருஷ்டி கழிப்பதில் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. உப்புக்கல் திருஷ்டி, வர மிளகாய் திருஷ்டி, எலுமிச்சை மற்றும் பூசணிக்காய் திருஷ்டி, தேங்காய் திருஷ்டி என வழிமுறைகளில் திருஷ்டி கழிப்பார்கள்.

மேலும் படிக்க | ஐப்பசி அடைமழை போல 4 ராசிக்காரர்களை பணமழையால் நனைய வைக்கும் சுக்கிரனின் கேட்டை நட்சத்திரப் பெயர்ச்சி!

பச்சை மிளகாய் திருஷ்டி : பச்சை மிளகாய் திருஷ்டியைப் பொறுத்தவரை வீட்டில் மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கும்போது, கல் உப்பை எடுத்து, அதனுடன் மூன்று பச்சை மிளகாய் வைத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் ஒன்றாக நின்று கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பச்சை மிளகாய் உப்புக்கல்லை கையில் வைத்து வலப்பக்கம் மூன்று முறையும், இடப்பக்கம் மூன்று முறையும் சுற்றி, பின்னர் அவர்களையும் சுற்றி வரவேண்டும். அதன்பிறகு தன் கையைக் கொண்டு கிழக்கு நோக்கி நின்று கொண்டு தலைமேல் மூன்று முறை வலப்பக்கம், இடபக்கம் என சுற்றி, எங்களை பிடித்த பீடைகள் எல்லாம் இன்றோடு ஒழிய வேண்டும் என மூன்று முறை சொல்லி வீட்டுக்கு வெளியே தூக்கி எறிந்துவிட வேண்டும். பிறரது வீடுகளுக்கு திருஷ்டியை போட்டுவிடக்கூடாது. அது உங்களுக்கு தான் ஆபத்து. உங்கள் வீட்டு வாசல் அல்லது சாலை வளைவுகளில், மூன்று அல்லது நான்கு ரோடு சந்திப்புகளில் வீசலாம். 

பச்சை மிளகாய் திருஷ்டி பலன்கள் : பச்சை மிளகாய் திருஷ்டி குறிப்பாக ஆரோக்கியதுக்காக செய்வதாகும். பச்சை மிளகாய் திருஷ்டி உங்கள் வீட்டில் இருக்கும் காத்து கருப்பு, பீடைகள் மற்றும் கெட்ட சக்திகளை விலக்கும். சாஸ்திர சம்பிரதாயங்களில் சொல்லப்பட்டதுபோல், இந்த திருஷ்டி கழித்த நாளில் இருந்து உங்கள் வீட்டில் நேர்மறையான எண்ணங்கள் எல்லோரிடமும் அதிகரிக்க தொடங்கும். வீட்டுக்குள் மகா லட்சுமியின் வருகையை நீங்கள் உணரலாம். வாரந்தோறும் ஞாயிறுக்கிழமை அல்லது புதன்கிழமை இரவுகளில் இந்த திருஷ்டியை நீங்கள் கழிக்கலாம். எல்லோரும் ஆரோகியத்துடனும் சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். 

வரமிளகாய் திருஷ்டி ; உங்கள் வீட்டில் பணப் பிரச்சனை அதிகமாக இருந்தால் கல் உப்புடன் சேர்த்து வரமிளகாய் திருஷ்டி கழிக்கலாம். இதன்மூலம் நிதி தடைகள் எல்லாம் விலகி சீக்கிரம் பணம் வரும் வழிகள் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் செய்ய தடங்கல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால் அந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கான கால சூழல் கை கூடும். 

திருஷ்டி எப்போது கழிக்க வேண்டும்?

வீட்டில் திருஷ்டி எப்போது கழித்தாலும் அக்கம் பக்கத்தினர் யாருக்கும் தெரியக்கூடாது. அதாவது மூன்றாவது நபருக்கு தெரியாமல் தான் திருஷ்டி கழிக்க வேண்டும். வீட்டில் புதிய நபர்கள் யார் வந்திருந்தாலும் அவர்கள் முன்னிலையில் திருஷ்டி கழிக்கக்கூடாது. இரவு நேரத்தில் எல்லோரும் தூங்க செல்வதற்கு முன் திருஷ்டி கழிப்பது சிறந்த நேரம். 

மேலும் படிக்க | 2025ஆம் ஆண்டில்... இந்த 5 ராசிக்காரர்கள் தான் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் - நல்ல காலம் வருது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News