ரிலெஷன்ஷிப்பை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? பதில் இதோ!

காதல் உறவுகளை ரகசியமாக வைத்துக்கொள்வது அந்த உறவிற்கு நல்லது என பலர் கூறுகின்றனர். இது உண்மையா? அப்படி ரகசியமாக இல்லை என்றால் அந்த உறவு என்ன ஆகும்?   

Written by - Yuvashree | Last Updated : Jan 28, 2024, 05:47 PM IST
  • காதல் உறவை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமா?
  • இதனால் என்ன நடக்கும்?
  • சில காதல் டிப்ஸ் இதோ!
ரிலெஷன்ஷிப்பை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டுமா? பதில் இதோ! title=

நவீன காலத்தில் சிக்கலானவையாக மற்றுமல்ல, பல புதிய சிக்கல்களையும் கொண்டிருக்கின்றன. உங்கள் உறவை சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக்குவது முதல், உங்கள் பார்ட்னரை பற்றி எதையும் வெளியிடாதது வரை- நவீன தம்பதிகள் பல இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் டேட்டிங் மற்றும் உறவு நிலைகளை வழிநடத்த உங்களுக்கு உதவ, உறவை தனிப்பட்டதாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். 

தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டியது ஏன்?

உங்களது காதல் உறவு குறித்து யார் தெரிந்து கொள்ள வேண்டும், யார் தெரிந்து கொள்ள கூடாது எனபது குறித்து முடிவெடுப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அதனால், உங்கள் பார்ட்னருடன் சேர்ந்து, இதை பிறரிடம் கூறலாமா எனக்கேட்டு ஆலோசனை செய்ய வேண்டும். உங்கள் உறவு குறித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்வதற்கு முன்பு இருவருக்கும் அதில் சம்மதிக்க வேண்டும். உங்களது தனிப்பட்ட விஷயங்களை சமூக ஊடகங்களின் கண்களில் இருந்து விலக்கி வைப்பது, உங்களது தனிப்பட்ட விஷயங்களை பாதுகாக்க உதவும். 

பேச்சுகளில் இருந்து தப்பிக்கலாம்..

நமது சமூக வலைதளங்களில் நண்பர்களாக இருப்பவர்கள் அனைவரும் நமக்கு உண்மையான நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். உங்களை பற்றி எதனை நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் அது குறித்த ஒரு கருத்து, அதை பார்ப்பவர்களின் மனதில் எழுந்து கொண்டே இருக்கும். அது, தவறான கருத்தாகவும் இருக்கலாம். அதனால் எந்த அளவிற்கு குறைவான நபர்களிடம் உங்கள் உறவு குறித்து தெரிவிக்கிறீர்களோ, அந்த அளவிற்கு அந்த உறவு நல்ல முறையில் இயங்கும், அந்த உறவில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். 

மேலும் படிக்க | வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

பிறரின் எதிர்பார்ப்பிற்காக அந்த உறவு இருக்க வேண்டாம்..

பொது வெளியில் அதிகாரப்பூர்வமாக்கப்பட்ட காதல் உறவுகள், பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டாம். ஆனால், அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்வதால், பிறரின் எதிர்பார்ப்பிற்கு ஆளானதாக ஆகி விடுகிறது. இந்த உறவை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொள்வது, உங்கள் உறவை உங்களின் நியாயப்படி வைத்துக்கொள்ள உதவும். இதனால், பிறரின் எதிர்பார்ப்புகளை நீங்கள ஈடு செய்ய வேண்டும் என்பது இல்லை. 

எல்லோரும் உங்களின் உறவை பார்த்து மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்:

நீங்கள் உங்களின் உறவில் மகிழ்ச்சியாக உள்ளீர்களா, இல்லையா என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமானது. இதை நீங்கள் பலரிடம் கூறுவதால், அதில் ஒருசிலர் பொறாமையுடனும் இருக்கலாம். இன்னும் சிலர்,அந்த உறவை பிரித்து விட பல வேலைகளையும் பார்க்கலாம். அதனால், கண்டிப்பாக உங்கள் உறவு குறித்த அதிகப்படியான விஷயங்களை வெளியில் சொல்வதை தவிர்த்து விடுங்கள். 

முந்தைய காதலர்களுக்கு தெரியாது..

உங்கள் உறவை நீங்கள் தனிப்பட்டதாக வைத்திருந்தால், உங்களுடன் முன்னர் உறவில் இருந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. உறவை இன்னும் கொஞ்சம் தனிப்பட்ட முறையில் வைத்திருப்பது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தாது. உங்கள் முன்னாள் காதலர்-காதலி நல்ல மனிதராக இல்லாதவர்களாக இருந்தால் நோக்கங்கள் தீங்கானதாக இருக்க வாய்ப்புள்ளது, எனவே உங்களது காதல் குறித்த விஷயங்களை தனிப்பட்டதாக வைத்திருப்பது உங்களுக்கு உதவக்கூடும்.

மேலும் படிக்க | Skin Care: சருமத்தில் அதிக எண்ணெய் பசையா? இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News