ATM விதிமுறைகளை மாற்றிய SBI வங்கி; புது வழிமுறை இதோ

SBI New Rule: தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 29, 2021, 03:43 PM IST
ATM விதிமுறைகளை மாற்றிய SBI வங்கி; புது வழிமுறை இதோ title=

புதுடெல்லி: SBI New Rule: ஏடிஎம்களில் பணம் எடுக்கும் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற எஸ்பிஐ புதிய முயற்சியை எடுத்துள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க OTP ஐ உள்ளிட வேண்டும். இந்த புதிய விதியில் OTP இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் OTP பெறுவார்கள். அதன்படி அந்த OTP-ஐ உள்ளிட்ட பிறகுதான் ATMல் இருந்து பணத்தை எடுக்க முடியும்.

இந்த தகவலை வங்கி ட்வீட் செய்துள்ளது
இந்த தகவலை வங்கி ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. அந்த ட்வீட்டில், எஸ்பிஐ (SBI) ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களின் OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை மோசடி (Online Fraud) செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும். மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும். OTP அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெறும் முறை எவ்வாறு செயல்படும் என்பதை SBI வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ALSO READ: Home Loan Interest: குறைந்த வட்டி; வீட்டு கடனில் கலக்கும் பிரபல வங்கிகள் 

 

 

புதிய விதி என்ன தெரியுமா?
10,000 மற்றும் அதற்கு மேல் பணத்தை எடுக்கும் போது இந்த விதிகள் பொருந்தும். எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் OTP மூலம் ஒவ்வொரு முறையும் தங்கள் ஏடிஎம்மில் இருந்து ரூ 10000 மற்றும் அதற்கு மேல் எடுக்க அனுமதிக்கும்.

செயல்முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
* எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க OTP தேவைப்படும்.
* இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
* இந்த OTP நான்கு இலக்க எண்ணாக இருக்கும், அது வாடிக்கையாளர் ஒரு முறை பரிவர்த்தனைக்கு பெறும்.
* நீங்கள் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டதும், ஏடிஎம் திரையில் OTP ஐ உள்ளிடுமாறு கேட்கப்படும்.
* வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-ஐ பணம் எடுப்பதற்கு இந்தத் திரையில் உள்ளிட வேண்டும்.

இந்த செயல்முறை ஏன் தேவை
வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் வகையில் வங்கியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI இந்தியாவில் 71,705 BC அவுட்லெட்டுகளுடன் 22,224 கிளைகள் மற்றும் 63,906 ATM/CDM கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தோராயமாக 91 மில்லியன் மற்றும் 20 மில்லியன் ஆகும்.

ALSO READ:SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News