Chandra Grahan 2022: 2022 ஆம் ஆண்டில் எத்தனை சந்திர கிரகணம்

Chandra Grahan/Lunar Eclipse 2022: 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 16 அன்று நிகழும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 21, 2021, 06:32 PM IST
Chandra Grahan 2022: 2022 ஆம் ஆண்டில் எத்தனை சந்திர கிரகணம் title=

Chandra Grahan 2022: இந்த வருடம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளது. அதன்படி 2022 பிரமாண்டமாகவும் தெய்வீகமாகவும் வரவேற்கப்படும். இவ்வாறான நிலையில் புத்தாண்டின் முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் மக்களும் ஆர்வத்துடன் உள்ளனர். கிரகணம் என்று கூறியதும் அனைவரும் அதை பற்றி தெரிந்துகொள்ள அதிக ஆர்வம் கொள்வார்கள். ஏனெனில் கிரகணம் மத ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 2022ல் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும். இதில் இரண்டு சந்திர கிரகணங்கள் (Chandra Grahan 2022) மற்றும் இரண்டு சூரிய கிரகணங்கள் (Surya Grahan 2022) ஆகும். 2022 இல் சந்திர கிரகணம் (Chandra Grahan in 2022) எப்போது நிகழும் என்பதை பார்போம். 

2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் (First Lunar Eclipse of 2022)
2022ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் (Chandra Grahan 2022) மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நாள் திங்கட்கிழமையில் வருகிறது. இந்த சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இது காலை 07:02 முதல் தொடங்கி மதியம் 12:20 வரை நீடிக்கும். இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் தெற்கு/மேற்கு ஐரோப்பா, தெற்கு/மேற்கு ஆசியா, தென் அமெரிக்கா, பசிபிக், ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, அண்டார்டிகா உள்ளிட்ட சில பகுதிகளில் காணலாம். இது தவிர, இந்த சந்திர கிரகணத்தின் சூதக் காலம், கிரகணத்திற்கு 9 மணி நேரத்திற்கு முன் துவங்கும்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

2022 இரண்டாவது சந்திர கிரகணம் 2022 (Second Lunar Eclipse 2022)
2022 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதி செவ்வாய்கிழமை நிகழவுள்ளது. இந்திய நேரப்படி இந்த நாளில் பிற்பகல் 1.32 மணி முதல் இரவு 7.27 மணி வரை நிகழும். மேலும், இந்த சந்திர கிரகணத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, வடக்கு / கிழக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணலாம். இந்த சந்திர கிரகணத்தின் சூதகம் 9 மணி நேரத்திற்கு முன்பு தொடங்கி கிரகணம் முடியும் வரை இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கர்ப்பிணிகள் உட்பட அனைத்து மக்களும் சூதக் காலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது)

Also Read | கஜமுகன் கணபதி முழுமுதற் கடவுளான வரலாறு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News