ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனைக்கு தடை ?

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென யூனியன் பிரேதச அரசுகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 

Last Updated : Apr 28, 2019, 08:48 AM IST
ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனைக்கு தடை ? title=

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டுமென யூனியன் பிரேதச அரசுகளுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. 

ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவை ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூர் மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் சோதனை செய்தது. அதில் ஷாம்புவில் நச்சு வாய்ந்த ரசாயனங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், அசாம் மற்றும் அருணாசலம் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பேபி ஷாம்பு பாட்டில்களை அகற்ற வேண்டுமென்றும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடித்ததில் உத்தரவிட்டுள்ளது. ஜான்சன் & ஜான்சன் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சு வாய்ந்த ரசாயனங்கள் கலந்திருப்பது சோதனையில் தெரியவந்துள்ளதால், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இந்த  நடவடிக்கையை எடுத்துள்ளது.

Trending News