சிவாங்கியின் ஜாக்ஃப்ரூட் ரோகன் ஜோஷ்: காஷ்மீர் உணவுகள் குறிப்பாக அசைவ உணவுகள் உலகப் புகழ் பெற்றவை. குறும்பாட்டுக் கறிவகைகள் மிகவும் சுவை நிறைந்திருக்கும். ஆனால் நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், மட்டனுக்கு பதிலாக சுவபையான ஜாக்ஃப்ரூட் வைத்து ரோகன் ஜோஷ் எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்- பலாப்பழம் - 1 கிலோ ரிபைண்டு எண்ணெய் - 3 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன் பெருஞ்சீரகத்தூள் - 3 டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் பிரவுன் ஏலக்காய் தூள் - 3 பச்சை ஏலக்காய் - 4 பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன் பிரிஞ்சி இலை - 2 பட்டை - 2 கிராம்பு- 1 முதல் 3 குங்குமப்பூ -3 டீஸ்பூன் தயிர் - 1 கப் இஞ்சி - 2 அங்குலம்.
ரோகன் ஜோஷ் செய்வது எப்படி
முதலில் பலாப்பழ துண்டுகளை நன்கு தண்ணீர் விட்டு கழுவி எடுத்து வைக்கவும். பின்னர் குக்கரில் எண்ணெய்யை விட்டு சூடுபடுத்தவும். அதன்பின் வாணலியில் பலாப்பழத் துண்டுகளுடன் பட்டை, பிரிஞ்சி இலை, பச்சை ஏலக்காய், கிராம்பு, உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விடவும். பொன்னிறத்தில் வரும்வரை வறுக்கவும். பொன்னிறமாக வந்தவுடன் ஒரு கப் தண்ணீர் இதில் சேர்க்கவும். இதற்கு பிறகு சிறிது சிவப்பு மிளகாய் தூள், குங்குமப்பூவை பலாப்பழத் துண்டுகளுடன் சேர்த்து கலக்கவும். அப்படியே சூட்டில் 1 நிமிடத்துக்கு விடவும். இதன் பின் தயிரை மிக்ஸியில் நன்றாக அடித்து நைஸாக எடுத்துக் கொள்ளவும். அதை குக்கரில் உள்ள பலாப்பழத்தில் சேர்த்து கலக்கவும். இனி 2 கப் தண்ணீர், சீரகத்தூள், இஞ்சி சேர்த்து குக்கரை மூடி 3 நிமிடங்கள் வேக விடவும். பலாப்பழம் மென்மையாக ஆகிவிட்டவுடன் பச்சை மற்றும் பிரவுன் ஏலக்காயை கிள்ளிப் போடவும். பின்னர் குக்கரில் 2 விசில் வரும்வரை வேகவிடவும். பின்னர் எண்ணெய் பிரிந்துவரும்போது இறக்கி விடலாம். சுவையான காஷ்மீரி ஜாக்ஃப்ரூட் ரோகன் ஜோஷ் தயார்.