CTET 2019 தேர்வு தேதியை சிபிஎஸ்சி அறிவித்தது! விவரம் உள்ளே!

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

Last Updated : Feb 6, 2019, 10:02 AM IST
CTET 2019 தேர்வு தேதியை சிபிஎஸ்சி அறிவித்தது! விவரம் உள்ளே! title=

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. 

2019ம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாளாகும். இதற்கான ஆன்-லைன் விண்ணப்ப நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது.

> 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. 
> 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும். 

இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்று சி.டி.இ.டி. அறிவித்துள்ளது. 

Trending News