வாழ்க்கையில் ஒரு இனம்புரியாத தனிமை உணர்வு எப்பொழுது வரும் என்றால், என் கனவுகள் நிறைவெறும் என்ற சிறகு கிடைத்து விட்டது. இனிமே நான் பறக்க போறேன் என்ற மகிழ்ச்சியின் நீண்ட பயணத்தில் பல சவால்கள் கொண்டுவரும் போது...
வெளியில் இருந்து பார்க்கும் போது வாழ்க்கை நன்றாக தான் செல்கிறது. அதாவது நல்ல வேலை, மனைவி, குழந்தை, பெரியோர்களின் ஆசீர்வாதம் என தோன்றும். அப்படியிருந்தும் மனதிற்குள்ளேயே ஒரு தனிமை, குழப்பம் நிலவுகிறது. இந்த குழப்பம் எப்பொழுது வரும் என்றால், வாழ்க்கையில் கனவுகள் நிறைவேற்ற இறக்கைகள் கிடைத்தவுடன் நாம் வாழ்க்கை பயணத்தில் பறக்கத் தொடங்கினோம். ஆனால் இந்த நீண்ட பயணத்தின், இந்த தருணம் நமக்கு பல சவால்களைத் தருகிறது.
ஜெய்ப்பூரை சேர்ந்த காயத்ரி சதுர்வேதி கூறியது, 'என் கணவன் ஒரு வங்கியாளர் ஆவார். இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு போகிறார்கள். பள்ளியில் இருந்து வரும்போது அவர்களுக்கான உலகில் திரும்பி வருகிறார்கள். கணவன் கூட எப்போதும் வேலையில் பிஸியாக இருக்கிறார். திருமணம் ஆகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் கூட என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ஆனால் அதற்கான சரியான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக மனம் அமைதியற்று இருக்கிறது. நான் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி. திருமணம் செய்துக்கொண்டேன், பின்னர் குடும்ப வேலை காரணமாக பணிக்கு செல்லவில்லை. தற்போது அனைவரும் அவரவர் வேளையில் பிஸியாக உள்ளனர். எனக்கென்று ஒரு வேலை இல்லை. அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே என் வேலை என வாழ்க்கையாக மாறிவிட்டது!. இப்போது எனக்குள் எனக்கான எதுவும் இல்லையா? என்ற உணர்வு எனக்குள் வருகிறது. இது மாதிரி முதலில் எனக்குள் இல்லை.
காயத்ரிக்குள் ஏற்பட்டுள்ள உணர்வு, அவருக்கானது மட்டுமில்லை, உற்று கவனித்தால், இந்த கேள்வி நமக்கானதாகவும் இருக்கும். இந்த கடினமான கேள்விக்கு விடை என்ன?
இதற்க்கு முதல் காரணம் நமது சிந்தனை தான். பெண்கள் கல்வி கற்பதற்கு மிகவும் எளிதாக வழிவிடுகிறோம். ஆனால் அதன் பிறகு என்ன நடக்கிறது. அவர்களின் வாழ்க்கை குறித்து என்ன நினைக்கிறோம். எங்க கல்யாணம் பண்ணி கொடுக்கலாம். எவ்வளவு நகைகள் போடா முடியும். கல்யாணத்திற்கு பின்பு குடும்பத்தை வழி நடத்த வேண்டும். குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே நூற்றாண்டுகளாக நமது சிந்தனையாக இருக்கிறது. ஆனால் காயத்திரி போன்ற எம்.பி.ஏ படித்த பட்டத்தாரிகள் கனவு என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்தது உண்டா? சிந்திக்காததால் தான் காயத்திரி போன்ற மனநிலை ஏற்படுகிறது. இது தற்போது ஒவ்வொரும் வீட்டிலும் காணப்படுகிறது.
இந்த மனநிலையில் இருந்து எப்படி வெளியே போவது....
முதலில், கணவனும் மனைவியும் இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் சவால் அங்கே இருக்கும்... எந்த குடும்பத்தில் தாத்தா-பாட்டி இல்லையோ, அங்கு குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு பிரச்சினைகளுக்கான பெரும் சவால் இருக்கும்.
இந்த சூழ்நிலையில், மிக முக்கியமான ஒரு விஷயம் தங்கள் கனவுகளை நிறைவேற்ற கணவனுக்கும் மட்டும் தான் உரிமை உண்டு, பெண்களுக்கு இல்லை என்ற பிம்பத்தை உடைக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் ஒன்றாக கனவுகளுடன் நடக்க வேண்டும். இது உங்கள் கனவு, இது எனது கனவு என்று இல்லாமல், இது நமது கனவுகள் என்று பயணிக்க வேண்டும்.
அப்படி செல்லும் போது ஒரு புதிய உலக உறவுக்குள் நுழைகிறோம். தங்கள் கனவுகளின் கதாபாத்திரங்களுக்கு நிறங்களை நிரப்ப ஒன்றாக வேலை செய்ய வேண்டும். பாலின சமத்துவம் பற்றிய பேச்சுவது எளிதானவை, ஆனால் இங்கு நிறைய பேர் அதற்க்கான முயற்சியில் இல்லை என்பதே கசப்பான உண்மை.
இத்தகைய சூழ்நிலைகளை திறந்த இதயங்களோடு, தாராள மனோநிலையுடன் நாம் தீர்க்க வேண்டும். கவனம் செலுத்தப்படா விட்டால், குடும்ப இதழ்களில் முள்ளின் ஆபத்து ஆழமாக இருக்கும் ......
நன்றி: திரு. தயா சங்கர் (ஜீ நியூஸ் இந்தி டிஜிட்டல் ஆசிரியர்)
மொழி பெயர்ப்பு: சிவா முருகேசன் (ஜீ நியூஸ் தமிழ்)
ட்விட்டர்: https://twitter.com/dayashankarmi