FASTag இல்லையா பதற்றம் வேண்டாம் - ஜனவரி 1 முதல் சிறப்பு சேவை ஆரம்பம்

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக்கை அரசு  கட்டாயமாக்கியது. மேலும் ஃபாஸ்டேக்கைப் பயன் படுத்தாதவர்களிடமிருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதற்கிடையில் ஒரு நல்ல செய்தியும் வந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 1, 2020, 11:04 PM IST
  • சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக்கை அரசு கட்டாயமாக்கியது.
  • பணம் கொடுத்து கட்டணம் (Cash Transactions) செலுத்தும் முறை இருக்காது.
  • சுங்கச்சாவடி பாதைகளிலும் முன் கட்டண அட்டை வசதி அறிமுகப்படுத்தப்படும்.
  • ஃபாஸ்டாக் ஒரு மின்னணு கட்டண வசூல் நுட்பம் ஆகும்.
FASTag இல்லையா பதற்றம் வேண்டாம் - ஜனவரி 1 முதல் சிறப்பு சேவை ஆரம்பம் title=

நீங்கள் ஒரு தனியார் கார் அல்லது டாக்ஸியை ஓட்டுகிறீகள் என்றால் ஃபாஸ்டேக் மிகவும் அவசியம். FASTag இல்லையெனில் சுங்கச்சாவடி வழியாக வாகனத்தில் செல்ல முடியாது. ஆனால் கவலை வேண்டாம். பாஸ்ட் டேக் இல்லையென்றால் நீங்கள் செல்லலாம். இருப்பினும், FASTag மிகவும் அவசியம். கடந்த ஆண்டு டிசம்பரில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்டேக்கை அரசு  கட்டாயமாக்கியது. ஃபாஸ்டேக்கைப் பயன் படுத்தாதவர்களிடமிருந்து சுங்கச்சாவடி கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால், இதற்கிடையில் ஒரு நல்ல செய்தியும் வந்துள்ளது. தற்போது, ​​இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படாது. வாருங்கள் அதைக்குறித்து பார்ப்போம்.

ஜனவரி 1, 2021 முதல், டோல் பிளாசாவின் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஃபாஸ்ட் டேக் (FASTag) பாதைகளாக மாற்றப்படும். ஜனவரி 1 முதல் எந்த டோல் பிளாசாவிலும் பணம் கொடுத்து கட்டணம் (Cash Transactions) செலுத்தும் முறை இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்களிடம் ஃபாஸ்டாக் இல்லை என்றால், உங்கள் கார் சுங்கச்சாவடி வழியாக செல்ல முடியாது. இது உங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் அல்லது நீங்கள் திரும்பி செல்ல வேண்டியிருக்கும். 

ALSO READ |  ஜனவரி 1 முதல் பழைய வாகனங்களுக்கும் இனி FASTag அவசியம்: Govt

ஆனால் தற்போது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு சிறப்பு சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சேவையை பயன்படுத்தி நீங்கள் சுங்கச்சாவடி வழியாக செல்லலாம். அதாவது டோல் பிளாசாவில் முன்பணம் செலுத்திய Prepaid card service அட்டையை வாங்கிக்கொள்ளலாம். டோல் பிளாசாவில் நெரிசலைத் தடுக்க, ஜனவரி 1 முதல் அனைத்து சுங்கச்சாவடி பாதைகளிலும் முன் கட்டண அட்டை வசதி அறிமுகப்படுத்தப்படும்.

டோல் பிளாசாவில் பண பரிவர்த்தனைகள் கிடையாது:

ஜனவரி 1 முதல் டோல் பிளாசாவில் (Toll Plaza) பண பரிவர்த்தனை இருக்காது. இந்த வசதி படிப்படியாக குறைத்து அனைத்து பாதைகளிலும் ஃபாஸ்டாக் கட்டாயமாக்கப்படும். ஃபாஸ்டாக் இல்லாதவர்கள் அபராதத் தொகையை இரட்டிப்பாக செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த முன்-கட்டண Prepaid card service பண பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக செயல்படும்.

ALSO READ | சுங்கச்சாவடிகளில் 'Fastag' முறை கட்டாயம்.. தவறினால் இருமடங்கு அபராதம்

இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படாது:

உங்கள் காரில் ஃபாஸ்டாக் (Electronic Toll Collection) இல்லை என்றால், இந்த முன் கட்டண அட்டைகளை டோல் பிளாசாவில் பாயிண்ட்-ஆஃப்-சேல்ஸ் இல் வாங்கலாம். ஃபாஸ்டேக்கிற்கு பதிலாக இந்த அட்டைகளைப் பயன்படுத்துவதில் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படாது.நல்ல விஷயம் என்னவென்றால், ஃபாஸ்டேக் இருந்தாலும் இந்த முன் கட்டண அட்டையை நீங்கள் பயன்படுத்தலாம். அதாவது அட்டை சேவையை தடுப்புப்பட்டியலில் வைத்திருந்தாலோ அல்லது ரீசார்ஜ் செய்ய மறந்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஃபாஸ்டாக் என்றால் என்ன என்று தெரியுமா?

ஃபாஸ்டாக் ஒரு மின்னணு கட்டண வசூல் நுட்பம் என்பதை உங்களுக்கு சொல்கிறோம். FASTag என்பது உங்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்டில் ஒட்டப்பட வேண்டிய சிறிய மறுபயன்பாட்டு குறிச்சொல் ஆகும். இது RFID தொழில்நுட்பத்தில் இயங்குகிறது மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகவோ அல்லது உங்கள் FASTag இணைக்கப்பட்ட கணக்கில் இருந்து உடனடி பரிவரத்தனையை அனுமதிக்கிறது. உங்கள் வாகனம் சுங்கச்சாவடி வாயிலைக் கடந்ததும், பணம் எடுக்கப்பட்டதற்கான விவரங்களுடன் எஸ்எம்எஸ் உங்கள் தொலைபேசிக்கு வரும். அதே நேரத்தில், உங்கள் ஃபாஸ்டாக் கணக்கின் தொகை தீர்ந்து விட்டால், அதை மீண்டும் ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

ALSO READ |  கட்டண தள்ளுபடியைப் பெற FASTag கட்டாயம்... அரசாங்கத்தின் புதிய விதி இதோ..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News