Power of words: 86 கோடி வார்த்தை பேசுவது யார் தெரியுமா..!!!

ஒரு நாளில் அல்லது உங்கள் வாழ் நாளில் எத்தனை சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 11, 2021, 11:08 AM IST
  • நாம் பயன்படுத்தும் சொற்களுக்கு ஆற்றல் உண்டு
  • மனிதன் தினமும் சொற்களின் உலகில் சிக்கிக் கொள்கிறான்
  • நாம் வாழ்நாளில் லட்சக்கணக்கான சொற்களை பயன்படுத்துகிறோம்.
Power of words: 86 கோடி வார்த்தை பேசுவது யார் தெரியுமா..!!! title=

புதுடெல்லி: காலையில் கண்களைத் திறப்பது முதல் இரவில் தூங்குவது வரை நாங்கள் ஏதாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். சில நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுடன் பேசுகிறோம், சில நேரங்களில் நண்பர்களுடன், சில நேரங்களில் வாடிக்கையாளர்களுடனோ அல்லது அலுவலக சகாக்களுடனோ  என  உரையாடல் ஒருபோதும் முடிவே இருப்பதில்லை. 

ஆனால் ஒரு நாளில் அல்லது உங்கள் வாழ் நாளில் எத்தனை சொற்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? சொற்களின் ஆற்றலைப் பற்றியும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி  பற்றியும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும்

ஒருவரது இயல்பிற்கு ஏற்ப அவரது பேச்சு இருக்கும். சிலர் குறைவாகப் பேசுவார்கள், சிலர் அதிகம் பேச விரும்புவார்கள். LinkedIn பயிற்றுவிப்பாளர் (LinkedIn Learning Instructor) ) ஜெஃப் அன்செல் ( Jeff Ansell) நடத்திய ஆய்வில், , ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 7000 சொற்களைப் பேசுகிறார் என கூறப்பட்டுள்ளது. பலர் இதை விட அதிகமான சொற்களைப் பேசுகிறார்கள் என்பது மிகவும் ஆச்சர்யமான தகவலாக இருக்கிறது அல்லவா .

ALSO READ | சர்வதேச அரங்கில் சிறகு விரிக்கும் “Koo"; நைஜீரியாவில் காலடி வைத்தது

சராசரி மதிப்பீட்டை எடுத்துக் கொண்டால், ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதிலும் 860,341,500 சொற்களைப் பேசுகிறார், அதாவது சுமார் 86 கோடி வார்த்தைகள். எனவே உங்கள் வாழ்க்கை முழுவதிலும், 86 கோடி வார்த்தைகளை பேச உங்கள் சக்தியை எந்த அளவிற்கு செலவிழிக்க வேண்டும் என்று கற்பனை செய்து பாருங்கள். பிரிட்டிஷ் எழுத்தாளரும் ஒளிபரப்பாளருமான கில்ஸ் பிராண்ட்ரெத் தனது புத்தகமான The Joy of Lex: How to Have Fun with 860,341,500 Words என்ற புத்தகத்தில் இது பற்றி கூறப்பட்டுள்ளது. அகராதியில் இவ்வளவு சொற்கள் இருக்கிறதா என்ன என  உங்களுக்கு ஆச்சர்யம் ஏற்படலாம்!

மனிதன் பேசும் வார்த்தைகளை மற்ற விஷயங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு சாதாரண மனிதனும் தனது வாழ்க்கையில் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் 20 வால்யூமை 14.5 முறை வாசிப்பதற்கு ஒப்பானது என கூறப்படுகிறது.  அதாவது, அகராதியில், 20 வால்யூம்களில் எழுதப்பட்ட சொற்கள் முழுவதையும் , 14.5 முறை படிப்பதற்கு சமமான அளவில் ஒவ்வொரு மனிதனும் தன வாழ்நாளில் பேசுகிறான் என்பதாகும். மனித சொற்களை என்சைக்ளோபீடியாவின் 32 வால்யூம் புத்தகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்,  நாம் பயன்படுத்தும் வார்த்தைகளிலிருந்து 19.5 புத்தகங்களை எழுதலாம். பைபிளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் கிங் கேம்ஸ் பைபிளில் (King James Bible ) உள்ள சொற்களை விட 1110 மடங்கு வார்த்தைகளைப் பேசுகிறார்.

சொற்கள் மிகவும் ஆற்றல் மிக்கது. எனவே, சரியான சொற்களை பயன்ப்படுத்தி, மற்றவர்கள் மனதை புன்படுத்தாமல் பேசச வேண்டும் என்பதும் முக்கியம். 

ALSO READ | உங்க கிட்ட இந்த “2” ரூபாய் காயின் இருக்கா; இந்தாங்க 5 லட்சம் ரூபாய்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News