விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?

திருமணம் என்பது விவாகரத்தில் சென்று முடிவதே மிகவும் கஷ்டத்திற்குரிய விஷயமாகும். அப்படி, விவாகரத்து ஆனவர்கள் என்ன செய்ய கூடாது தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jul 27, 2024, 04:53 PM IST
  • விவாகரத்திற்கு பின்னர் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்
  • என்னென்ன விஷயங்களை சரி பார்க்க வேண்டும்?
  • உளவியல் ரீதியாகவும் சில டிப்ஸ்!
விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?  title=

“திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்” என பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், அனைத்து காதலும் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடியும் உறவுகளில் எல்லாம் காதல் நிலைப்பதில்லை. காதல் முடிவதனால் மட்டுமல்ல, பல்வேறு காரணங்களுக்காக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் விவாகரத்து பெற முனைகின்றனர். முன்னர், என்ன பிரச்சனை வந்தாலும் அதை பொறுத்துக்கொண்டு பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருக்கின்றனர். ஆனால், தற்போதைய உலகம் நன்றாகவே மாறி விட்டது. இதனால், தங்களுக்கு ஒரு உறவு ஒத்துவரவில்லை என்றால், பிரிவதுதான் சரி என்ற முடிவை பலர் எடுக்கின்றனர். இதன் பிறகு எந்த பிரச்சனை வந்தாலம் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணமும் பலருக்கு மேலோங்கி இருக்கிறது. அப்படி, விவாகரத்து வாங்கியவர்கள் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது? அது குறித்து இங்கு விவரமாக பார்க்கலாம். 

விவாகரத்தை ஒரு தண்டனையாக தரக்கூடாது:

விவாகரத்து என வரும் போது, அதில் கணவன்-மனைவி ஆகிய இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். இதில், விருப்பம் இல்லாத பலர், தன்னிடம் விவாகரத்து கேட்ட பார்ட்னரை வேண்டுமென்றே பழிவாங்க சில விஷயங்களை செய்வர். எனவே, இந்த விவாகரத்து வழக்குமுறைகளின் போது பார்டனருக்கு சிரமம் கொடுக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது. 

உங்கள் உரிமைகளை தெரிந்து கொள்ளாமல் எதிலும் கையெழுத்து போடக்கூடாது:

குழந்தைகள் கஸ்டடி, ஜீவனாம்சம் ஆகிய அனைத்தையும் தெரிந்து கொண்டு கையெழுத்திட் வேண்டும். இதனால், உங்கள் எதிர்காலம் வீணாகாமல் பாதுகாக்கப்படலாம். இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்பதும் நல்லதாகும்.

குழந்தைகளை இதில் நுழைக்க வேண்டாம்:

குழந்தை பெற்றவர்கள் விவாகரத்து பெற முனைந்தால், அவர்களை உங்கள் சுய ஆதாயத்திற்காக எங்கும் உபயோகிக்க வேண்டாம். விவாகரத்திற்கு பிறகு அல்லது அதற்கு முன்னர் உங்கள் பார்ட்னர் குறித்து உங்கள் குழந்தையிடம் குறை கூறுவதை தவிர்த்து விடுங்கள். இது, உங்கள் குழந்தைக்கு அதன் பெற்றோர் குறித்த தவறான புரிதலை உருவாக்கலாம். 

சொத்துகளை மறைக்க வேண்டாம்:

விவாகரத்தின் போது, சட்டப்படி உங்கள் சொத்து விவரங்களையும் சமர்ப்பிக்கும் நிலை வரலாம். எனவே, சொத்து விவரங்களை இதில் இருந்து மறைக்க முயற்சி செய்ய வேண்டாம். இதனால், உங்களுக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் வரலாம். 

கூட்டு வங்கி கணக்கு (Joint Bank Account):

ஒரு சிலர், தங்கள் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து கூட்டு வங்கி கணக்கை தொடங்கியிருப்பர். விவாகரத்து சமயத்தில் இருவரும் சொத்துகளை பிரிக்க நினைத்தால் இதை சரி பங்காக எடுக்க வேண்டும். ஒருவரே பணத்தை முழுமையாக எடுத்துக்கொண்டாலும் பிரச்சனை வரலாம்.

மேலும் படிக்க | பெண்கள் விவாகரத்து செய்வதற்கான 4 காரணங்கள்

விவாகரத்து பெற்றவர்களுக்கு உளவியல் டிப்ஸ்:

>விவாகரத்து என்பது, ஒரு உறவை இழந்ததற்கு ஒப்பீடாக அமைகிறது. இது உங்கள் வாழ்க்கையின் ஒரு இழப்பு என்பதால், உங்கள் மனதை ஆறுதல் படுத்தும் விஷயங்களை மட்டும் செய்ய வேண்டும்.

>எண்ணங்கள் மற்றும் சிந்தனைகள், இந்த சமயத்தில் தீவிரமாக இருக்கலாம். எனவே, உங்களுடன் நீங்கள் அதிகம் நேரம் செலவிட்டு உங்களது சிறந்த நண்பராக நீங்கள் மாற வேண்டும். 

>தனிப்பட்ட வளர்ச்சியில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். இது உங்களின் சுய தைரியத்தையும், சுய மரியாதையும் வளர்த்துக்கொள்ள உதவும். 

>விவாகரத்து முடிந்தவுடன் வேறு ஒரு உறவிற்குள் உடனே குதிப்பதை தவிர்க்கவும். இது பல சமயங்களில் நமது உணர்வுகள் நினைவு கூறப்படாமலேயே மடிந்து விடுவதற்கு வழி வகுக்கலாம். 

மேலும் படிக்க | திருமணமாகி 3 நிமிடத்தில் விவாகரத்து! காரணம் கேட்டா ஆடி பாேயிருவீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News