போக்குவரத்து துறையில் வாகன விதிமீறல் உள்ளிட்டவைகளுக்காக இ-சலான் முறையில் உரியவருக்கு எஸ்எம்எஸ் மூலம் லிங்க் அனுப்பி, அதன் மூலம் அபாரத தொகையை போக்குவரத்து காவல்துறை வசூலிக்கிறது. அபராதம் செலுத்த வேண்டியவர், தங்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் வரும் லிங்கை கிளிக் செய்து அதன் மூலம் ஆன்லைனில் அபாரத தொகை செலுத்தலாம். சென்னை போன்ற நகரங்களில் வாகன விதிமீறலில் ஈடுபட்டால் கேமரா மூலம் அதனை கண்காணித்து, வண்டி எண்ணின் அடிப்படையில் உரிமையாளருக்கு செல்போன் மூலம் அபாரத தொகை குறித்த தகவல் அனுப்பப்படுகிறது.
அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்து பார்க்கும்போது எந்த தவறுக்காக அபாரத தொகை விதிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலுடன், எவ்வளவு அபராத தொகை செலுத்த வேண்டும் என்ற விவரமும் இருக்கும். இதனடிப்படையில் அந்த தொகையை ஆன்லைனிலேயே செலுத்திக் கொள்ளலாம். இதனை குறி வைத்தது தான் இப்போது மோசடிகளை மோசடியாளர்கள் அரங்கேற்றுகின்றன. போக்குவரத்து காவல்துறை அனுப்பியதுபோல் இ-சலான்களைப் போல் எஸ்எம்எஸ் மூலம் அலெர்ட் மெசேஜ் அனுப்பி, மோசடி செய்வதாக காவல்துறையும் அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர். போலி இ- சலான்களை பெறும் நபரும் உண்மை தன்மையை ஆராயாமல் இந்த மோசடிக்கு ஆளாவதாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் தான் இத்தகைய மோசடிகள் அதிகளவில் நடத்து கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க | சமையல் கேஸ் சிலிண்டரைப் போலவே வணிக சிலிண்டர் விலையும் குறைந்தது! விலை ரூ 1,695
E-Challan மோசடி எவ்வாறு செயல்படுகிறது?
மோசடி செய்பவர்கள் இ-சலான் அலெர்டுகளை நினைவில் வைத்திருக்கும் வகையில் ஒரு குறுஞ்செய்தியை உங்கள் தொலைபேசிக்கு அனுப்புவார்கள். அந்த செய்திகளில் கட்டண லிங்க் இருக்கும். நீங்கள் அதைக் கிளிக் செய்தால், உங்கள் தொலைபேசியின் பாதுகாப்பு மோசடியாளர்களுடன் சமரசம் செய்யப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்படும். இதனை வைத்து ஹேக்கர்கள் உங்கள் கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களை அணுகலாம். இவை உங்களுக்கு தெரியவருவதற்கு முன்பே அனைத்து மோசடிகளும் அரங்கேற வாய்ப்புகள் உள்ளன.
மோசடியை தவிர்ப்பது எப்படி?
காவல்துறையின் தவல்படி, மோசடி செய்பவர்கள் போக்குவரத்து அதிகாரிகள் பயன்படுத்தும் இ-சலான் போன்று, கண்டுபிடிக்க முடியாத வகையில் அதனை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இருப்பினும், உன்னிப்பான ஒரு பரிசோதனை முயற்சியில் இது மோசடியா அல்லது உண்மையான லிங்கா என கண்டறியலாம். இ-சலான்களில் பணம் செலுத்துவதற்கான இணைப்பு https://echallan.parivahan.gov.in/ ஆகும். மோசடி செய்பவர்களும் இதே மாதிரியான லிங்கை தான் உபயோகிக்கின்றனர். ஆனால் அதில் ஒரு சிறிய தவறு இருக்கும். நம்மால் எளிதில் புலப்பட்டுக் கொள்ள முடியாத வகையில் இருக்கும். அதாவது, https://echallan.parivahan.in/ என்று இருக்கும். அதில் "gov.in" என்று இருக்காது. உண்மையான இ-சலான் லிங்கில் gov.in உடன் முடிவடையும்.
மோசடியைக் கண்டறிய கூடுதல் வழிகள்
நீங்கள் அவசரமாக பணம் செலுத்தாமல் இருப்பது மிகவும் முக்கியம். சைபர் போலீஸ் அதிகாரிகள் சொல்வது என்னவென்றால், வாகன உரிமையாளர்கள் எந்தவொரு லிங்கையும் கிளிக் செய்வதற்கு முன்பு அத்தகைய செய்திகளை கவனமாக சரிபார்க்க வேண்டும். உண்மையான செய்திகளை அடையாளம் காண்பதற்கான ஒரு முக்கிய வழி, அதில் உங்கள் வாகனம், அதன் எஞ்சின் எண் மற்றும் சேஸ் எண் பற்றிய விவரங்கள் இருக்கும். மோசடி செய்பவர்கள் அனுப்பும் எஸ்எம்எஸ் பொறிகளில் இத்தகைய தகவல்கள் இருக்காது. உங்களுக்கு உண்மையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிடுவது மற்றொரு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். மேலும், செல்போன் எண்ணிலிருந்து மின்-சலான் எச்சரிக்கை ஒருபோதும் வராது.
காவல்துறைக்கு தெரிவியுங்கள்
மோசடியில் நீங்கள் சிக்கியதை உணரும் தருணத்தில் நொடியும் தாமதிக்காமல் கால்துறைக்கு தகவல் கொடுங்கள். 1930 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். அல்லது தேசிய சைபர் கிரைம் போர்டல் www.cybercrime.gov.in - புகார் செய்யுங்கள். இது குறித்து வங்கிக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அடுத்தகட்டமாக அருகில் உள்ள காவல்நிலையத்திலும் ஒரு புகாரை பதிவு செய்வது அவசியம்.
மேலும் படிக்க | விலைவாசி அதிகரிக்கும் நேரம் இது! செப்டம்பர் முதல் நாளில் இருந்து ஏற்படும் மாற்றங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ