கொடுத்த கடனை திரும்ப கேட்க கூச்சமா இருக்கா? இதோ அதற்கு ஈசியான வழி!

Easy Ways To Ask For The Money : பலரிடம், நாம் கடன் கொடுத்திருப்போம். ஆனால், அந்த கடனை எப்படி திரும்ப வாங்குவது என்றே தெரியாது. இதற்கான ஈசியான வழிகள், இதோ.  

Written by - Yuvashree | Last Updated : Nov 22, 2024, 12:21 PM IST
  • கொடுத்த கடனை திரும்ப வாங்க டிப்ஸ்!
  • எப்படி கேட்பது?
  • ஈசியான சில வழிகள்..
கொடுத்த கடனை திரும்ப கேட்க கூச்சமா இருக்கா? இதோ அதற்கு ஈசியான வழி! title=

Easy Ways To Ask For The Money : ‘கடன் அன்பை முறிக்கும்’ என பல கடைகளில் படித்திருப்போம், அதை ஆங்காங்கே பார்ப்பதாலோ என்னவோ அந்த வாசகம் சிலரது மனதில் அப்படியே பதிந்து விடும். இருப்பினும், மிகவும் பிடித்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள், நண்பர்கள் வந்து பண உதவி கேட்கும் போது தயங்காமல் செய்து விடுவோம். இப்படி கடன் கொடுப்பவர்கள், இரண்டு வகையை சேர்ந்தவர்களாக இருப்பர். ஒரு வகையினருக்கு, கொடுத்த கடனை எப்படி கட் அண்ட் ரைட்டாக பேசி வாங்க வேண்டும் என்று தெரியும். இன்னொரு வகையினருக்கு, கொடுத்தது தன் பணமாகவே இருந்தாலும், அதை எப்படி திரும்ப கேட்க வேண்டும் என்பது தெரியாது. அப்படி, கொடுத்த கடனை திரும்ப கேட்க வெட்கப்படுபவர்களுக்கான சிம்பிள் டிப்ஸ், இதாே.

முன்கூட்டியே தெரிவிப்பது:

நீங்கள் ஏதேனும் பொருளை அல்லது பணத்தை ஒருவருக்கு கடனாக கொடுக்கும் போது, இந்த தேதிக்குகுள் அல்லது நேரத்திற்குள் எனக்கு திரும்ப வேண்டும் என்று கூறியே கொடுக்க வேண்டும். அப்படி செய்தால், அந்த தொகையை அல்லது பொருளை மீண்டும் உங்களிடம் கொடுக்க வேண்டும் என்ற நினைவு அவர்களுக்கு இருந்துக்கொண்டே இருக்கும். 

மரியாதையுடன் கேட்பது:

உங்களிடம் ஒருவர் கடன் வாங்கியிருக்கிறார் என்பதற்காக, அவரை நீங்கள் மரியாதை குறைவாக நடத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எனவே, அவரிடம் பணத்தை கேட்கும் போது மரியாதையாக கேட்க வேண்டும். “உங்களுக்கு நினைவிருக்கா? அன்னிக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தேனே” என கேட்கலாம். மனிதர்கள், மரியாதை மிக்க மனிதர்களை மதிப்பார்கள். எனவே, நீங்கள் கடன் கொடுத்த நபர் நல்ல மனிதராக இருந்தார், விரைவில் அந்த பணம் உங்கள் கைக்கு கிடைத்து விடும். 

காலக்கெடு:

கடன் வாங்கியவர் உங்களுக்கு திருப்பிச் செலுத்தும் தேதியைக் கேட்கவில்லை என்றால், நீங்கள் கொடுத்த பணம் அல்லது பொருளைத் திருப்பித் தர ஒரு குறிப்பிட்ட தேதியை அவர்களுக்கு கொடுக்கவும். அந்த தேதியில், உங்களுக்கு அந்த பணம் குறித்து என்ன தேவை இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும். உங்கள் தேவை என்ன என்பதை புரிந்து கொண்டால், அவர் கண்டிப்பாக அந்த பணத்தை குறிப்பிட்ட தேதிக்குள் திருப்பி கொடுத்து விடுவார்.

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கடன் பெற உதவும் CIBIL ஸ்கோர்... சிறப்பாக இருக்க செய்ய வேண்டியவை

தவணை முறை:

உங்களிடம் கடன் கொடுத்தவர், அவசர தேவைக்காக வாங்கியிருந்தார் என்றால், அந்த தொகையை அவரால் குறிப்பிட்ட தேதிக்குள் மீண்டும் கொடுக்க முடியாமல் போகலாம். அவரால் அந்த முழு தொகையை ஒரே முறையில் கொடுக்க முடியவில்லை என்றால், அவரை நீங்கள் தவணை முறையில் கொடுக்க சொல்லலாம். அது பெரிய தொகையாக இருந்தால் 12 மாதங்களில் இத்தனை தவணை என கணக்குப்போட்டு, அந்த தொகையை கொடுக்க செய்யலாம். ஆனால், இந்த தவணை தொகையை சரியாக செலுத்தி விட வேண்டும் என்பதை கூற வேண்டும். இதனால், உங்கள் பணமும் கைக்கு வந்து விடும், இருவருக்குள்ளும் மனஸ்தாபமும் எழாது. 

மூன்றாம் தரப்பு:

கடன் வாங்கிய அந்த நபர், என்ன செய்தும் கடனை திரும்ப கொடுக்கவில்லை என்றால், மூன்றாவதாக ஒரு நபரை அணுகலாம். அவர் இருவருக்கும் பொதுவானவராக இருக்கலாம். அது ஒரு குடும்ப உறுப்பினராக அல்லது இது தொடர்பான பிரச்சனைகளை டீல் செய்பவர்களாக இருக்கலாம். தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் எடுக்கலாம். 

மேலும் படிக்க | அவசரத்துக்கு கடன் வேணும்னாலும் இந்த விஷயங்கள் தெரியலைன்னா வம்பு தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News