நம்மில் பலர், அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே செய்யும் வேலைகளில் மும்முரமாக உள்ளோம். இப்படி அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் நம்மில் பலருக்கு உடல் உழைப்பே இல்லாமல் போகிறது. இதனால், முதுகுத்தண்டு பிரச்சனை, இடுப்பு வலி, முதுகு வலி என பல உடல் உபாதைகள் வருகின்றன. இவற்றுடன் சேர்த்து சிலருக்கு மலச்சிக்கலும் (Constipation) வருகிறது. இதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால், இதை சரிசெய்ய சிறிய அளவிலான உடற்பயிற்சிகளே போதுமானது. அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
அமர்ந்து கொண்டே திரும்பும் பயிற்சி (Seated Twist)
குடலுக்கான உடற்பயிற்சிகள்தான், மலச்சிக்கலை நீக்கும் சரியான பயிற்சியாக கூறப்படுகிறது. அந்த பயிற்சிகளில் முதல் இடத்தை பெற்றுள்ளது, Seated Twist. இது, யோகா முறையில் இருந்து வந்த பயிற்சி என்றாலும் பிற ஆசனங்கள் போல இல்லாமல் இது எளிதாகவே இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என நிறைய வீடியோக்கள் இணையத்தில் உள்ளன, அதைப்பார்த்து இதை எப்படி செய்ய வேண்டும் என கற்றுக் கொண்டு செய்யுங்கள்.
மேலும் படிக்க | தொழில் தொடங்க கடன் வேண்டுமா... ஈஸியாக இந்த திட்டத்தில் வாங்கலாம்!
சைல்ட்ஸ் போஸ் (Child's Pose)
முன்னர் கூறிய உடற்பயிற்சியை போலவே, இதுவும் யோகாசன வகையை சேர்ந்ததுதான். இந்த உடற்பயிற்சியினை மேற்கொள்வதால் உங்கள் உடல் மிகவும் நன்றாக வேலை செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்ற்னர். இது, மலச்சிக்கல் மட்டுமன்றி பல்வேறு உடல் உபாதைகளையும் தவிர்க்கும். முதுகை ரிலாக்ஸ் செய்வதற்கு, முதுகெலும்பை வலுபெற செய்வதற்கு, உங்கள் பின்புறத்தை விரிவடைய செய்வதற்கு, உங்கள் இடுப்பு பகுதியில் உள்ள அழுத்தத்தை குறைப்பதற்கு என பல்வேறு விஷயங்களுக்கு இதை நீங்கள் செய்யலாம். இது, செரிமான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுமாம்.
எப்படி செய்வது?
-முட்டி போட்டு அமருங்கள்.
-உங்கள் இடுப்பு முட்டியில் படும்படி அமருங்கள்.
-மெதுவாக உங்கள் கைகளை நீட்டி முன்னாள் வாருங்கள். இப்படி செய்கையில் உங்களது கை முட்டி தரையில் பட வேண்டும். மெதுவாக மூச்சு விடுங்கள். சில நொடுகள் அப்படியே இருங்கள்
-அப்படியே பின்னாள் வாருங்கள். இப்போது உங்கள் மார்பு முட்டியில் பட வேண்டும். இதையே ரிபீட் செய்யவும்.
டீப் ஸ்க்வாட் (Deep Squat)
ஸ்க்வாட் என்பது, நாம் தோப்புக்கரணம் போடுவது போன்ற ஒரு உடற்பயிற்சிதான். டீப் ஸ்க்வாட்டிற்கும் இதற்கும் சிறிய அளவிலேயே வித்தியாசம் உள்ளது. இது, முதுகு வலியை நிவர்த்தி செய்யும் உடற்பயிற்சியாகவும் அமைகிறது. அது மட்டுமன்றி, இடுப்பு மற்றும் தொடை பகுதியையும் இது வலுபெற செய்கிறது.
எப்படி செய்வது?
-உங்கள் இடுப்பின் அளவிற்கு கால்களை விரித்து வைத்து நில்லுங்கள்.
-முட்டியை மடக்கி இடுப்பின் வலுவால் நன்கு குனிந்து நிமிருங்கள்.
-எவ்வளவு குனிய முடியுமோ அவ்வளவு குணிந்து எழுந்திருங்கள்.
-சில நிமிடங்களுக்கு குணிந்த படி சில நொடிகள் அப்படியே ஹோல்ட் செய்யுங்கள். பின்னர் மெல்ல எழுந்திருங்கள்.
-இதை செய்யும் முன்பு தசை பிடிப்பி பிரச்சனை ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்த பிறகு இதை செய்யலாம்.
பட்டர்ஃப்ளை பயிற்சி (Butterfly Exercise)
மலச்சிக்கலை தவிர்ப்பதில், இந்த உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. நம் குடல் பகுதிக்கு அழுத்தம் கொடுத்து மலச்சிக்கலை நிவர்த்தி செய்வதில் மட்டுமன்றி உடல் சோர்வை போக்கவும் முதுகுத்தண்டை வலுப்படுத்தவும் இந்த உடற்பயிற்சி உதவும்.
எப்படி செய்வது?
-காலை விரித்து, முதுகுத்தண்டை நேராக வைத்து தரையில் அமருங்கள்.
-இரண்டு பக்கமும் உங்கள் முட்டியை மடக்கி அமருங்கள். சாப்பிட அமருவது போல அல்ல, இரண்டு பாதங்களும் ஒன்றாக நேருக்கு நேர் ஒட்டி அமர வேண்டும்.
-இரண்டு கைகளாலும் உங்கள் பாதங்களை தொட்டு முட்டியை பட்டர்ஃப்ளை தன் சிறகை அடிப்பது போல செய்யுங்கள். ஆனால், வேகமாக அல்ல, மெதுவாக.
-இப்படியே சில நிமிடங்கள் தொடர்ந்து செய்தால், மலச்சிக்கல் பிரச்சனையை மறந்தே விடலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் காத்திருக்கும் அதிரடி ஊதிய உயர்வு...குஷியில் ஊழியர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ