மலச்சிக்கல் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியங்கள் உடனடி நிவாரணம் அளிக்கும்

Constipation Home Remedies: மலச்சிக்கல் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயிற்றில் மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மலச்சிக்கல் ஏற்பட்டால், வயிறு உப்பசம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. 

மலச்சிக்கல் காரணமாக வயிற்றில் ஒரு சங்கடமான நிலை ஏற்படுகின்றது. நமது சமையலறையில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி மலச்சிக்கலில் இருந்து எளிதில் நிவாரணம் பெற முடியும். மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெற விரும்பினால், முதலில் நீங்கள் உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய வேண்டும். வயிற்றில் உள்ள நச்சை நீக்க, நீங்கள் தொடர்ந்து சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

 

1 /5

ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ஆகியவை உங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றன. இவை மலமிளக்கியாக செயல்படுகின்றன. இவை மலத்தை மென்மையாக மாற்றுகின்றன. இந்த எண்ணெய்கள் குடலை உயவூட்டுகின்றன. இது உங்கள் வயிற்றை சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது. ஆகையால் மலச்சிக்கலில் இருந்து எளிதில் நிவாரணம் பெற உதவுகிறது.

2 /5

இந்த சூப்பர்ஃபுட் மல்டிவைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள நொதிகளை உடைத்து குடல் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

3 /5

புதினா மற்றும் இஞ்சியில் சக்தி வாய்ந்த என்சைம்கள் உள்ளன. அவை செரிமான அமைப்புக்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. இஞ்சி உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. மலச்சிக்கலை நீக்க இஞ்சி டீ அல்லது தண்ணீரை உட்கொள்ளலாம்.  

4 /5

புளிப்பு உணவுகளில் நல்ல அளவு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனுடன், வயிற்றை சுத்தப்படுத்தவும் இவை உதவும். வைட்டமின் சி நிறைந்த நீர் உடலின் செரிமான அமைப்பை மேலும் மேம்படுத்துகிறது. ஆகையால் எந்த வித பிரச்சனையும் வராமல் இருக்க, தினமும் ஒரு கிளாஸ் புதிய எலுமிச்சை சாறு குடிக்கவும்.  

5 /5

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எள்ளில் உடலுக்கு நன்மை செய்யும் அத்தியாவசிய எண்ணெய்கள் உள்ளன. விதைகளில் உள்ள எண்ணெய்கள் குடல்களை தளர்த்தவும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கவும் உதவுகின்றன.