பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் குட்கா, பான் மசாலா-க்கு தடை!

பீகார் மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குட்கா மற்றும் பான் மசாலா தடை செய்யப்பட்டுள்ளன. 

Last Updated : Nov 1, 2019, 12:56 PM IST
பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் குட்கா, பான் மசாலா-க்கு தடை! title=

பீகார் மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குட்கா மற்றும் பான் மசாலா தடை செய்யப்பட்டுள்ளன. 

மம்தா பானர்ஜி தலைமையிலான வங்காள அரசாங்கமும் இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி நிகோடின் காணப்படும் எல்லா தயாரிப்புகளையும், தயாரித்தல், சேமித்தல் மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரியது. எனினும் சிகரெட் தடை குறித்து இந்த அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
 
தற்போதைய அறிவிப்பின் படி., ​​இந்த விதி நவம்பர் 7-ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும். தடையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இது மேலும் தொடர கருதப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2011-இன் படி, குட்கா மற்றும் பான் மசாலாவை துறை முற்றிலும் தடை செய்துள்ளது.

முன்னதாக பீகாரில், குட்காவுடன், பான் மசாலாவும் தடை செய்யப்பட்டன. இந்நிலையில் பீகாரின் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் மம்தா அரசாங்கத்தில், குட்காவுடன், பான் மசாலாவும் தடை செய்யப்பட்டுள்ளது.  

பீகார், மேற்குவங்கம் தவிர பல மாநிலங்களில் குட்கா தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்தப் பொருள்களை விற்பதும், பதுக்கி வைத்திருப்பதும் குற்றவியல் தண்டனைக்கு உரியதாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோர் மீது காவல்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை ஆகிய இரு துறைகளிலும் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News