Watch! சாமி 2 படத்தின் ‘மொளகா பொடியே’ பாடலின் லிரிக் வீடியோ!

'சாமி ஸ்கொயர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மொளகா பொடியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2018, 10:14 AM IST
Watch! சாமி 2 படத்தின் ‘மொளகா பொடியே’ பாடலின் லிரிக் வீடியோ! title=

'சாமி ஸ்கொயர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மொளகா பொடியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

விக்ரம் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘சாமி’. 

இந்த படத்தின் இரண்டாம் பாகம் 15 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்தார். இரண்டாம் பாகத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த இரண்டாம் பாகத்தில் த்ரிஷாவையும் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்தனர். படப்பிடிப்பு தொடங்கியதும் த்ரிஷா திடீரென்று ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதாக தனது டிவிட்டர் பாகத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது படக்குழுவினர் த்ரிஷாவுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் 'சாமி 2 or சாமி ஸ்கொயர்' படத்தில் இடம் பெறும் ’மொளகாப்பொடியே...’ என்கிற பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம் இணைத்து டூயட் ஆடியுள்ளனர்.

Trending News