தமிழால் இணைவோம்!! ஹிப்ஹாப் தமிழா-வின் #தமிழி இசை வீடியோ அற்புதம்!!

தமிழ் மொழியின் தோற்றம் முதல் கீழடி அகழ்வாய்வு பயணம் வரை கூறும் ஹிப்ஹாப் தமிழாவின் "தமிழி" இசை காணொளி.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Sep 20, 2019, 07:26 PM IST
தமிழால் இணைவோம்!! ஹிப்ஹாப் தமிழா-வின் #தமிழி இசை வீடியோ அற்புதம்!!
Pic Courtesy : Youtube Grab

புதுடெல்லி: 2015 முதல் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வரும் ஹிப்ஹாப் தமிழா (Hiphop Tamizha),  ஆம்பள திரைப்படம் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனாலும் அதற்கு முன்பு அனிருத், அவரை "வணக்கம் சென்னை" படம் மூலம் திரைக்கு கொண்டு வந்தார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசை எப்பவும் துள்ளலாக இருக்கும். இவர் வெளியிடும் வீடியோ இசை ஆல்பம் தமிழகர்களின் பண்பாடுகளை போற்றும் விதமாகவும், அதை பார்ப்பவர்களுக்கு தமிழன் என்ற உணர்வை தூண்டும் விதமாகவும் இப்பது வழக்கம். தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் மாபெரும் போராட்டத்தில் ஆதி என்று அழைக்கப்படும் ஹிப்ஹாப் தமிழாவின் பங்கு மிக முக்கியமானது. 

அவ்வப்போது தனது இசை மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழகர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றை போற்றும் விதமாக காணொளி வெளியிட்டு வருகிறார். இவரின் இசை காணொளி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது என்பதற்கு சமூக வலைத்தளங்களே சான்று!!

இந்தநிலையில், தற்போது "தமிழி" என்ற இசை காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் மொழியின் தோற்றம் முதல் கீழடி அகழ்வாய்வு பயணம் வரை கூறியுள்ளார். அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி....!! நீங்களும் பாருங்கள்....!!