PhonePe Wallet-ல் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியுமா?

போன்பே வாலட் பயன்படுத்துவதற்கு கேஒய்சி தேவை அல்லது குறைந்தபட்சம் அரசால் வழங்கப்பட்ட ஐடி, பாஸ்போர்ட், என்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்றவற்றின் தகவலை உள்ளிட வேண்டும்.   

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2022, 06:25 AM IST
  • டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனை அதிகமாகி வருகிறது.
  • டிஜிட்டல் வாலட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரபலமான தளம் போன்பே.
  • போன்பேயில் வாலட் முறையில் நீங்கள் பணத்தை சேமித்து கொள்ளலாம்.
PhonePe Wallet-ல் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்ற முடியுமா? title=

இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் டிஜிட்டல் முறையிலேயே பணப் பரிமாற்றம் செய்ய தொடங்கிவிட்டனர், வேகமாகவும் பாதுகாப்பாகவும் பண பரிவர்த்தனை செய்ய டிஜிட்டல் வாலட் பயன்படுகிறது.  வீட்டிலிருந்தபடியே நீங்கள் இதன் மூலம் பணம் பரிமாறிக்கொள்வது மட்டுமின்றி யாருக்கு பணம் அனுப்பினோம் யாரிடமிருந்து பணம் பெற்றோம் என்கிற தகவல்கள் அனைத்தும் இதில் துல்லியமாக சேமிக்கப்பட்டு இருக்கிறது.  இந்தியாவில் பலதரப்பட்ட மக்களும் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த டிஜிட்டல் வாலட்டில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான தளம் போன்பே ஆகும்.

போன்பே நிறுவனம் என்பது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஆன்லைன் கட்டணச் சேவையாகும்.  இந்த செயலி உங்களை மொபைல் ரீசார்ஜ், டிடிஹெச் சேவைகள், தரவு அட்டைகள், பணம் செலுத்துதல் போன்ற பல்வேறு வேலைகளை செய்ய அனுமதிக்கிறது.  போன்பேயில் யூபிஐ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு கேஒய்சி தேவையில்லை, ஆனால் ரிசர்வ் வங்கி கூற்றுப்படி போன்பே வாலட் பயன்படுத்துவதற்கு கேஒய்சி தேவை அல்லது குறைந்தபட்சம் அரசால் வழங்கப்பட்ட ஐடி, பாஸ்போர்ட், என்ஆர்இஜிஏ வேலை அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது பான் கார்டு போன்றவற்றின் தகவலை உள்ளிட வேண்டும்.  இதுவே நீங்கள் முழு கேஒய்சி பயனராக இருந்தால் போன்பே வாலட்டில் உள்ள பணத்தை உங்கள் வங்கிக் கணக்கிற்கு விரைவாக மாற்றலாம்.

மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோ பயனர்கள் எச்சரிக்கை: 5ஜி போன்களை வாங்க வேண்டாம்! 

போன்பே வாலட்டில் இருந்து வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல் :

1) உங்கள் ஸ்மார்ட்போனில், போன்பே செயலியை திறக்கவும்.

2) "My Money" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3) வாலட்/கிஃப்ட்ஸ்/வவுச்சர் பகுதிக்குச் சென்று, மெனுவிலிருந்து "PhonePe Wallet" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

4) மேற்புறத்தில் "Withdrawal" என்பதை காணலாம்.

5) உங்கள் வங்கி ஐகானை கீழ்நோக்கி இழுப்பதன் மூலம் வாலட் ஐகானில் வைக்கவும்.

6) போன்பே வாலட் கேஒய்சி-ஐ முடித்த வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்தச் சேவைகளுக்குத் தகுதியுடையவர்கள்.

7) போன்பே-ல் கட்டண முறையைச் சேர்க்க வேண்டும், அதில் வங்கிக் கணக்கைச் சேர்த்தவுடன், முதன்மையாக இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பணப் பரிமாற்றம் நிகழும்.  கூடுதலாக, உங்கள் போன்பே வாலட்டில் உள்ள ரிவார்டு இருப்பைத் திரும்பப் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் படிக்க | பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்தால் விரைவில் ‘அம்பானி’ ஆகலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News