போலி திருமண சான்றிதழ் சமர்பித்த 10 இந்தியர்கள், தாய்லாந்தில் கைது!

குடியுரிமை வேண்டி போலி திருமண சான்றிதழ் சமர்பித்ததாக 10 இந்தியர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Updated: Dec 5, 2018, 04:26 PM IST
போலி திருமண சான்றிதழ் சமர்பித்த 10 இந்தியர்கள், தாய்லாந்தில் கைது!
Representational Image

குடியுரிமை வேண்டி போலி திருமண சான்றிதழ் சமர்பித்ததாக 10 இந்தியர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்!

தாய்லாந்து நாட்டு குடியுரிமை வேண்டி, அந்நாட்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்டதாக போலி பத்திரங்களை சமர்பித்த 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் 20 இந்தியர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்திய ஆண்களுக்கு போலி மனைவிகளாக நடிக்க ஒப்புக்கொண்ட 24 தாய் பெண்மனிகளையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருவதாகவும் காவல்துறை அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய ஆண்களின் குடும்ப தலைவியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட பெண்கள் 500-லிருந்து 5000 வரையிலான தாய் பணத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தாய்லாந்தின் குடிவரவு பணியகத்தின் தலைமை அதிகாரி ஹக்பர்ன், நாட்டின் அனைத்து குடியேற்ற பரிசோதனை நிறுவனங்களுக்கும் வெளிநாட்டினர் அத்துமீறிய குடியிறுப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேடுதல் வேட்டையில் இந்தியர்கள் மட்டும் அல்லாமல் பிற நாட்டவரும் போலி சான்றிதழ்களுடன் சிக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.