Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே

ரயில்வே அளித்த தகவல்களின்படி, ஃபெஸ்டிவல் ஸ்பெஷல் மற்றும் குளோன் ஸ்பெஷல் உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரிசர்வ் ரயில்களாக மட்டுமே இயக்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 15, 2020, 05:26 PM IST
  • அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரிசர்வ் ரயில்களாக மட்டுமே இயக்கப்படுகின்றன.
  • டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே நீங்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவீர்கள்.
  • இ-டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது.
Indian Railways டிக்கெட் புக்கிங் விதிகளில் பெரிய மாற்றம்: விவரம் உள்ளே title=

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை வழங்க மண்டல ரயில்வேக்கு வழங்கப்படும் அனுமதி புறநகர் மற்றும் சில மண்டலங்களில் மட்டுமே இயங்கும் உள்ளூர் பயணிகள் ரயில்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தேவைக்கேற்ப இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் வழங்கப்படலாம்.

இந்த ரயில்களில் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இல்லாமல் செல்ல வேண்டாம்

ரயில்வே அளித்த தகவல்களின்படி, ஃபெஸ்டிவல் ஸ்பெஷல் மற்றும் குளோன் ஸ்பெஷல் உள்ளிட்ட அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரிசர்வ் ரயில்களாக மட்டுமே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கான டிக்கெட் விதிகளில் எந்த மாற்றமும் இல்லை. உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் இருந்தால் மட்டுமே நீங்கள் இந்த ரயில்களில் பயணிக்க முடியும்.

ஒருவேளை உங்களிடம் காத்திருப்பு டிக்கெட் இருந்தால், டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே நீங்கள் ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவீர்கள்.

காத்திருக்கும் டிக்கெட்டுகளுடன் நீங்கள் ரயிலில் ஏறினாலும், உங்கள் மீது டிக்கெட் இல்லாமல் பயணிப்பவரைப் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே (Indian Railways) கூறியுள்ளது.

கொரோனா தொற்றுநோயை (Corona Pandemic) கருத்தில் கொண்டு, தனி மனித இடைவெளி மற்றும் சுகாதார நெறிமுறைகளை மனதில் வைத்து ரயில்வேயில் காத்திருப்பு மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், ரயில்வேயில் இருந்து அனைவருக்கும் தகவல் வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ALSO READ: இனி ரயிலில் பயணம் செய்ய Platform ticket இருந்தால் போதும்... அதற்கான விதிமுறை என்ன?

இதை மனதில் கொள்ளுங்கள்

இ-டிக்கெட் (e Ticket) முன்பதிவு செய்வதற்கான விதிகளை இந்திய ரயில்வே மாற்றியுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்யும் போது பயணிகளின் மொபைல் எண்ணை நிரப்புமாறு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. டிக்கெட் முன்பதிவின் போது உள்ளிடப்படும் எண் பயணிக்கும் பயணியுடையதாக இருக்க வேண்டும்.

இ-டிக்கெட் முன்பதிவில், ‘IRCTC registered mobile number’ அதாவது ‘ஐ.ஆர்.சி.டி.சி-யில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்’ என்ற இடத்தில், பயணிகள் தங்கள் எண்ணைத்தான் உள்ளிட வேண்டும். யார் டிக்கெட்டை புக் செய்தாலும், மொபைல் எண் பயணியுடையதாக இருக்க வேண்டும்.

உங்கள் எண்ணைக் கொடுப்பதில் நன்மைகள் உள்ளன

ரயில்வேயின் கூற்றுப்படி, பெரும்பாலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனால் அவர்களின் முன்பதிவு மற்றொரு கணக்கு மூலம் செய்யப்படுகிறது. அல்லது ரயில்வே டிக்கெட் முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் தொடர்பு எண் பிஆர்எஸ் அமைப்பில் பதிவு செய்யப்படுவதில்லை.

ALSO READ: ரயில் பயணிகளின் கவனத்திற்கு: டிக்கெட் புக்கிங்கில் புதிய மாறுதல்களை செய்தது IRCTC

இத்தகைய சூழ்நிலையில், ரயில் ரத்து செய்யப்பட்டது பற்றிய தகவல்களோ அல்லது ரயிலின் கால அட்டவணையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களோ பயணிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, பயணிகளின் வசதிக்காக மட்டுமே ரயில்வே இந்த சேவையைத் தொடங்குகிறது. இதுவரை ரயில்வே அனைத்து தகவல்களையும் எஸ்.எம்.எஸ் மூலம் பயணிகளுக்கு அனுப்பி வருகிறது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News